பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாராசம்

245

நாற்கதி


நாராசம் = அம்பு, இருப்புச் சலாகை நாராயணி = துர்க்கை, பார்வதி நாரி = கள், நாணி, பன்னாடை, பார்வதி, பெண், தேன், சேனை நாரிகேளம் = தேங்காய் நாரிகை = பெண் நாரிபாகன் = சிவன் நார் = அன்பு, கயிறு, நார், நூல், பன்னாடை நாலல் = தொங்குதல் நால்வாயன் = வினாயகர் நால்வாய் = யானை நாலுதல் = தொங்குதல் நாவரசர் - அப்பர் சுவாமிகள், புலவர் நாவலர் = புலவர், மந்திரியார் நாவல் = வெற்றியொலி, துக்கக் குறிப்பு நாவாய் = இரேவதி நட்சத்திரம், கப்பல், ஒருபறை நாவி = கத்துாரி, கத்தூரி மான், புழுகுப்பூனை கொப்பூழ், மயிர்ச்சாந்து, கப்பல் நாவிகன் = கப்பலோட்டி நாவிதன் = அம்பட்டன் நாவுரி = ஒன்றரைப்படி நாவூறு = நாத்தோஷம் நாவை = கொழுநுனி நாழி = உள்தொளையுள்ள பொருள், ஒரு படி, பூரட்டாதி, அம்பறாத்துாணி, ஏர், நாழி, நாடா நாழிகை = வட்டம், கடிகாரம் நாழ் = குற்றம், செருக்கு, நாளங்காடி = பகற்கடை நாளத்தி = சிறு காலை நாளம் = பூந்தண்டு, உட்துளை நாளரும்பு = புதிய அரும்பு நாளறுதி = நாள்முற்றும் நாளார் = இயமன் நாளன் = கள், ஞானி, நாளிகேரம் = தென்னை மரம் நாளிருக்கை = திருவோலக்கம் நாளுலத்தல் = நாள் கழிதல் நாளோலை = ஜாதகம், முகூர்த்த ஒலை நாள் = காலம்,பகல், நட்சத்திரம் நாறி = கற்றாழை நாறுதல் = பூ தழைத்தல், மணத்தல்,தோன்றுதல், முளைத்தல், பிறத்தல் நாற்கதி = தேவர், மனிதர், நரகர், விலங்கு என்னும் நால்வகைப் பிறப்புக்கள்