பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நிக்கிரகம் 247

நித்தம்


நிக்கிரகம் 247 நித்தம்

நிக்கிரகம் = கட்டுதல், தண்டித்தல், வெறுத்தல், அதட்டல், அழித்தல்
நிக்கிரகித்தல் = கொல்லல், தண்டித்தல்
நிசா = இரவு
நிசாகரன் = சந்திரன்
நிசாசரன் = இராக்கதன், சந்திரன்
நிசாந்தம் = விடியற்காலம்
நிசாபதி = சந்திரன்
நிசாரி = சூரியன்
நிசான் = கொடி
நிசி = பொன், மஞ்சள், இரவு
நிசிசரர் = இராக்கதர்
நிசிதம் = கூர்மை, இகழ்ச்சி, இரும்பு
நிசித்தம் = விலக்கு
நிசிந்தன் - கடவுள், ஈசன்
நிசிமணி = சந்திரன்
நிசும்பர் = கொலைஞர்
நிச்சம் = தினம், எப்பொழுதும்
நிச்சலம் = அசைவின்மை, உறுதி நிலை
நீச்சலன் = கடவுள்
நிச்சிந்தன் = கடவுள், எண்ணமற்றவன், அருகன்
நிச்சுவாசம் = சுவாசத்தை வெளிவிடல், சுவாசத்தை அடக்கல்
நிடலம் = நெற்றி
நிடேதம் = தடை, விலக்கு
நிட்களம் = உருவின்மை
நிட்களங்கம் = களங்கமற்றது
நிட்காமியம் = விருப்பமின்மை
நிட்சேபம் = துடைத்தல், விடுதல், புதையல்
நிட்டுரம் = கொடுமை
நிட்டை = உறுதி, நம்பிக்கை, மனம், வாக்கு, உடம்பு ஆகிய திரிகரணங்களும் அசைவின்றி இருத்தல்
நிணம் = கொழுப்பு, மாமிசம்
நிணர்தல் = கட்டுதல், செறிதல்
நிணவை = பின்னல், பிணிப்பு
நிணறு = உருக்கம், இதம்
நிதனம் = வறுமை, நாசம்
நிதம்பம் = பெண்குறி, மலைப்பக்கம்
நிதானம் = மூலகாரணம், பொன், இரத்தினம், படை, தீர்மானம், நேர்மை, நிதானம்
நிதி = பொன்
நியாசனம் = இடைவிடாது தியானித்தல்
நித்தம் = நடனம், அழியா நிலை, நித்திய கருமம்