பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நித்தியம்

248

நியோகித்தல்


  
நித்தியம் = கடல், என்றும் உண்மை, தினமும்
நித்தியானந்தன் = கடவுள்
நித்திலம் = முத்து
நித்திலவடம் = முத்துமாலை
நிந்தாத்துதி = பழிப்பதுபோலப் புகழ்வது
நிபந்தம் = கடமை, படித்தரம்
நிபந்தனை = கடமை, ஏற்பாடு, தண்டனை, கட்டுப்பாடு
நிபம் = வஞ்சனை , உவமை, காரணம், கோள்
நிபாதம் = இறங்குதல், விழுதல்
நிபிடம் = நெருக்கம்
நிபுணன் = கல்வியிற் சிறந்தவன்
நிமலம் = அழுக்கின்மை
நிமலன் = கடவுள்
நிம்மில் = வாய் நெளிதல்
நிமித்தம் = அடையாளம், காரணம், சகுனம், இலக்கு
நிமித்திகன் = சகுனம் சொல்வோன், குறிசொல்வோன், சோதிடன்
நிமிரல் = சோறு, நிமிர்தல்
நிமிர்தல் = உயர்தல், நெருங்குதல், பரத்தல், இறுமாத்தல், மிகைத்தல், முயலுதல், நீளுதல்
நிமை = இமை
நிம்பத்தாரோன் = பாண்டியன்
நிம்பம் = வேம்பு
நிம்பன் = பாண்டியன்
நிம்பிரி = பொறாமை தோன்றும் குறிப்பு
நிம்பிரித்தல் = கோபித்தல்
நியக்குரோதம் = ஆலமரம், வன்னிமரம்
நியதம் = செய்கடன், எப்பொழுதும்
நியதி = ஊழ், செய்கடன், முறைமை, வரையறை
நியமநிஷ்டை = சந்தியாவந்தனம்
நியமம் = கடைவீதி, தெரு, நியதி, தேவர், கோயில், நீதி, உறுதி, நகரம், வீதிமண்டபம்
நியமனம் = கட்டளை, அமைவு, வகைப்படுத்தல்
நியர் = ஒளி
நியாசம் = விடுதல், வைத்தல், சமர்ப்பித்தல்
நியாயதுரந்தரன் = நியாயம் பேசுவோன்
நியாயவிதாயகன் = நியாயம் விதிப்பவன்
நியுதம் = இலட்சம்
நியோகம் = கட்டளைத் தொழில்
நியோகித்தல் = ஏவுதல்