பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நிரசனம்

249

நிருத்தம்


  
நிரசனம் = அழித்தல், தள்ளுதல், பட்டினி
நிரஞ்சனம் = அழுக்கின்மை
நிரஞ்சனன் = கடவுள், சிவன்
நிரஞ்சனி = பார்வதி
நிரட்சம் = பூகோள சமரேகை
நிரட்சரம் = எழுத்தின்மை
நிரதம் = எப்போதும்
நிரதிசயானந்தம் = தனக்கு மேற்பட்ட ஓர் ஆனந்தம் இல்லாமை
நிரத்தல் = கலத்தல், பரத்தல், நிரம்புதல், ஒழுங்கு செய்தல், சமாதானப்படல்
நிரத்தியயம் = குற்றமின்மை
நிரத்தம் = குரங்கு
நிரந்தரம் = இடைவெளி இன்மை, சராசரி, அழிவு, நெருக்கம், குரங்கு, எப்பொழுதும்
நிரந்தரன் = கடவுள், சிவன்
நிரந்தரி = பார்வதி
நிரந்தரித்தல் = நிறைதல், நெருங்கல்
நிரபராதி = குற்றமற்றவன்
நிரப்பு = குறைபாடு, வறுமை
நிரம்பாமொழி = மழலைமொழி
நிரயம் = நரகம்
நிரல் = வரிசை, ஒப்பு
நிரலுதல் = ஒழுங்கு படுதல்
நிரவுதல் = குறைதீர்த்தல்,பரவுதல், ஆழித்தல், சமனாதல்
நிரல்நிறை = ஒழுங்காக நிறுத்துதல்
நிராகரணம் = மறுத்தல், தூரப்போக்குதல்
நிராகரிப்பு = மறுப்பு
நிராகாரம் = ரூபமின்மை
நிராக்கிருதி = வடிவம் இன்மை
நிராகுலம் = சந்தோஷம்
நிராசை = ஆசையின்மை
நிராதாரன் = கடவுள்
நிராமயம் = நோயின்மை
நிராமன் = கடவுள்
நிராலம்பம் = ஆதாரம் வேண்டாதது
நிராலம்பன் = கடவுள்
நிரியாசம் = பிசின்
நிரியாணம் = சாவு, மோட்சம், யானைக் கடைக்கண்
நிரீட்சணம் = பார்வை
நிருதர் = அரக்கர்
நிருதி = அரக்கி, தென்மேற்குத் திசைப்பாலன்
நிருதிதிசை = தென்மேல் திசை
நிருத்தம் = பதம் பிரித்துப் பொருள் கூறும் நூல், நடனம், பற்றின்மை

32