பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நூழில்

255

நெட்டுயிர்ப்பு


நூழில் = கொன்று குவித்தல், செக்கு, தொளை , அலை, ஒரு கொடி, யானை நூழை = துண்மை, துவாரம், குகை, சிறுவாயில் நூறு = சுண்ணாம்பு, நூறு, நீறு, பொடி நூறுகோடி = வச்சிராயுதம் நூறுதல் = அழித்தல், வெட்டுதல், துரத்தல் நூற்பா = சூத்திரம் நூனம் = நிச்சயம், குறைவு நூன்மடந்தை = சரஸ்வதி நூன்முகம் = பாயிரம்

நெ

நெகுபு = நெருப்புக்குவை நெகிழ்தல் = இளகுகுதல், அவிழ்தல், தளரல், மலர்தல் நெகுதல் = உருகுதல் நெக்கு = உடை படல் நெக்குடைதல் = மனம் உருகுதல், நெகிழ்ந்து உருகுதல் நெஞ்சறிவுறுத்தல் = மனத்துக்கு அறிவுறுத்தல் நெடி = நாற்றம், காரம், சிள் வண்டு நெடித்தல் = தாமதித்தல் நெடியோன் = திருமால், பெரியோன் நெடியோன் குன்றம் = திருப்பதி மலை நெடில் = மூங்கில், நெட்டெழுத்து நெடுங்கணக்கு = அரிச்சுவடி நெடுங்கழுத்தல் = ஒட்டகம் நெடுங்கை = யானை நெடுந்தகை = பெரியோன் நெடுநீர் = கடல், நீட்டித்துச் செய்யும் இயல்பு, ஆழமாகிய நீர் நெடுமால் = திருமால் நெடுமை = பெருமை, ஆழம், கொடுமை நெடுமொழி = வஞ்சினம், தன்மேம்பாட்டுரை, புகழ்ச் சொல் நெடுவரி = ஒழுங்கு நெட்டாங்கம் = செருக்கு ,பழிப்பு நெட்டிடை = நெடுந்தூரம் நெட்டிலிங்கு = அசோகு நெட்டு = கர்வம், நெடுந்தூரம் நெட்டுயிர்த்தல் = பெருமூச்சு விடுதல் நெட்டுயிர்ப்பு = பெருமூச்சு