பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நெதி

256

நென்னல்


நெதி = செல்வம், முத்து, தியானம் நெம்பு = விலா எலும்பு, மேலெழும்புதல் நெய் = தேன், புனுகு, இரத்தம், சினேகம் நெய்தல் = ஆம்பல், இரங்கல், கடலும் கடல் சார்ந்த இடமும், நெய்தல் பறை, ஆடை நெய்தல், சாப்பறை நெய்தற்பறை = சாப்பறை நெய்தற் தெய்வம் = வருணன் நெய்த்தல் = கொழுத்தல், ஒளிர்தல் நெய்த்தோர் = இரத்தம் நெய்ப்பு = கொழுப்பு நெய்யணி = பிள்ளை பெற்றின்பின் முதல் முதல் முழுகுதல் நெய்யரி = பன்னாடை நெரி குழல் = சுருண்ட கூந்தல் நெரிதல் = உடைதல், வளைதல், நெருங்குதல், நொறுங்குதல் நெரியல் = மிளகு நெருடு = கோணல், வஞ்சனை, தடவுகை நெருநல் = நேற்று நெருநற்று = நேற்று நெளிதல் = வளைதல், இறுமாப்புக் காட்டல் நெளிப்பு = இறுமாப்பு நெளிவு = ஒரு மோதிரம், வளைவு நெறி = வழி, ஒழுங்கு, நீதி, சன்மார்க்கம், சுருள், சமயம், விதி, வழிகாட்டி, சுளுக்கு, நரம்புத்திரட்சி நெறித்தல் = சிலிர்த்தல் , செவ்வேநிற்றல், நிமிர்தல் நெறிப்படுத்தல் = ஒழுங்காக்கல் நெறிநீர் = கடல் நெறிப்பு = சிலிர்ப்பு, நெறிமை = நீதி நெறியிலார் = கீழ் மக்கள் நெறியிலி = துன்மார்க்கர், நெற்குனை = நெற்போர் நெற்றி = கொண்டை நெற்று = உலர்ந்த பழம், மோதுதல் நென்னல் = நேற்று முன்னாள்