பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அழிதூ

23

அளிது


அழிதூ = அலி, பேடு
அழிபசி = மிக்கபசி
அழி படர் = மிக்க துன்பம்
அழிபு = தோல்வி
அழிம்பு = குறும்பு
அழியுநர் = தோற்பவர்
அழுகுனி = அழுபிள்ளை
அழுக்கம் = கவலை
அழுக்கறுத்தல் = பொறாமை கொள்ளுதல்
அழுக்காறாமை = பொறாமை அடையாமை
அழுக்காறு = பொறாமை
அழுக்கு = பொறாமை, மாசு, அவித்தை, மலம்
அழுங்கல் = அலைதல், இரங்கல், ஒலித்தல், கெடுதல், தாமதித்தல், துன்புறல்
அழுங்காமை = அலையாமை, ஒலியாமை, கெடாமை, சோம்பாமை, வருத்தப்படாமை
அழுங்குவித்தல் = துன்புறச்செய்தல், தவிர்த்தல்
அழுத்து = ஆழம்
அழுவம் = ஆழம், கடல்و காடு, பரப்பு, பெருமை, குழி, நடு, போர், போர்க் களம், முரசு
அளகபந்தி = கூந்தல் பாரம்
அளகம் = கூந்தல், நீர்
அளகாதிபதி = குபேரன்
அளகு = கார்த்திகை, பறவை, பேடு, சேவல்
அளகேசன் = குபேரன்
அளக்கர் = கடல், உப்பளம், சேறு, குழை, பூமி, நீள் வழி
அவத்தல் = கருதுதல், கலத்தல், நுகர்தல்
அளத்தி = நெய்தல் நிலப்பெண்
அளப்பு = எல்லை
அளம் = நெய்தல் நிலம்
அளவர் = உப்பு அமைப்போர்
அளவு = எல்லை, முறைமை, அறம், அளவு நூல்
அளவை = நாள்
அளறு = சேறு, நரகம்
அளறுதல் = தொனித்தல்
அளி = அன்பு, அருள், காய், கொடை, எளிமை, தேன், வண்டுகள், குளிர்ச்சி, இரக்கம்
அளிகம் = நெற்றி, பொய், கட்டழகு
அளிதல் = உருகுதல், கலத்தல், வருந்தல், புண்படுதல், இகழ்தல்
அளிது = இரங்கத் தக்கது