பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நே


நே = நேயம், அன்பு, அருள், நேசம், தகுதி நேடல் = தேடல், எண்ணல் நேதா = தலைவர் நேதி = முறை நேத்திரம் = கண், பட்டாடை நேத்திரவீட்சணம் = அருளோடு பார்த்தல் நேத்திராம்பு = கண்ணீர் நேபத்தியம் = நாடக மேடையில் வேடம் தரிக்கும் இடம் நேமகம் = நியமித்தல், ஒழுங்கு, இருப்பிடம் நேமம் = நியமம், காலம், எல்லை, பாதி நேமி = சக்கரம், கடல், சக்கரவாளப் பறவை, வட்டம், தேர் உருள், பூமி நேமிவலயம் = பூமண்டலம் நேயம் = எண்ணெய், நெய், பக்தி, அன்பு, நன்மை நேரலர் = பகைவர் நேரார் = பகைவர் நேரி = விந்தமலை நேரிசம் = அம்புவகை, எறிபடை நேரிழை = பெண் நேரோடு = நாவல் மரம் நேர் = உவமை, உடன்பாடு, வலிமை, ஒப்புரவு, சரி, செவ்வை நீதி, நுட்பம், பாதி, மிகுதி, கூடுதல், நேர்மை, பரிதி நேர்ச்சி = இணக்கம், சம்மதம், நட்பு, தகுதி, நேர், சபதம் செய்தல் நேர்தல் = கொடுத்தல், உடன் படல், செல்லல், சம்பவித்தல், வேண்டுதல், தீண்டல், பொருந்துதல், எதிர்ப்படல், பெறுதல் நேர்த்தி = திருத்தம், சிறப்பு முயற்சி நேர்த்திக்கடன் = பிரார்த்தனை செய்து கொண்டது நேர்ந்தார் = நண்பர் நேர்மை = நுண்மை, செவ்வை, நீதி நேர்வு = கொடை, எதிர்த்தல், உடன்படுதல்

நை

நைகரம் = துன்பம், வருத்தம், குறைவு 33

நைசர்க்கியம் = இயல்பு நைச்சிகம் = தாழ்வு