பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பக்கி

261

பச்சிமம்


  
பக்கி = பட்சி
பக்குவம் = ஆற்றல், தகுதி
பங்கஜம் = தாமரை
பங்கம் = சேறு, துண்டு, தோல்வி, பழுது, பயம், பாவம், கொலை, பங்கு, பின்னம், அவமானம், பிரிவு
பங்கயம் = நாரை, தாமரை
பங்கயன் = பிரமன்
பங்கி = ஆண்மயிர், புறமயிர், வகை
பங்கு = முடம், சனி, பாகம்
பங்குனன் = அர்ச்சுனன்
பங்குனி = உத்திராட நட்சத்திரம், ஒரு மாதம்
பங்கேருகம் = தாமரை
பசத்தல் = நிறமாறுதல், பசுமையாதல், பொன்னிறமாதல்
பசப்பு = ஏமாற்றம், பசலை
பசப்புதல் = மயங்குதல், ஓயாமற் பேசுதல்
பசலை = தேமல், வருத்தம், பொன்நிறம், இளமை, காம நிறவேறுபாடு
பசறு = பச்சிலைச் சாறு
பசனம் = வழிபாடு சமைத்தல்
பசாசம் = பேய்
பசாசரதம் = பேய்த் தேர்
பசிதம் = விபூதி, சாம்பல்
பசு = உயிர், பசு, எருது, மிருகம், யாகத்திற்குரிய ஆடு, ஆன்மா
பசுகரணம் = சீவச்செயல்
பசுங்கதிர் = சந்திரன்
பசுத்துவம் = மிருகத்தன்மை
பசுநிரை = பசு மந்தை
பசுந்து = அழகு, நேர்த்தி, மேன்மை
பசுபதி = உயிர்களின் தலைவன், சிவபெருமான்
பசுபாசம் = மலம்
பசுபாலனம் = பசுவைக்காத்தல்
பசுபாலன் = ஆபுத்திரன், கோபாலன்
பசுபுண்ணியம் = சீவன்களுக்குச் செய்யும் புண்ணியம்
பசுப்பட்டி = பசுத் தொழுவம்
பசுமந்தை = பசுத் தொழுவம்
பசுமை = ஈரம், பசுமை, இளமை, பொன்நிறம், செவ்வி, செழுமை
பசும்பிடி = பச்சிலை
பசை = ஈரம், சாரம், இலாபம், பற்று, அன்பு, பயன், இரக்கம், பக்தி
பச்சவடம் = நீண்டசீலை
பச்சிமம் = பின், முதுகு, மேற்கு