பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பச்சை

262

பஞ்சவாசம்




  
பச்சை = மரகதம், புதன் , பசுமை, தோல், ஒரு நிறம், இளமை, ஈரம், கலியாண வரிசை, பயறு
பஞ்சகம் = ஐந்தின் கூட்டம்
பஞ்சகல்யாணி = ஐந்து நடையுடைய குதிரை
பஞ்சகவ்யம் = கோமயம், கொசலம், தயிர், பால், நெய்
பஞ்சகிருத்தியம் = இறை செய்யும் ஐவகைத் தொழில்கள், அவை படைப்பு, காப்பு, அழிப்பு, மறைப்பு, அருளல்
பஞ்சசத்தி = இச்சாசக்தி, ஞானாசத்தி, ஆதிசத்தி, கிரியாசத்தி, பராசத்தி
பஞ்சதந்திரம் = மித்திரபேதம், சுதிர்லாபம், சந்தி விக்ரகம், லப்தஹானி அசம் பிரேட்சிய காரித்துவம் ஆகிய ஐந்து உபாயங்கள்
பஞ்சதாரை = சீனி, சர்க்கரை
பஞ்சதிரவியம் = பஞ்சகவ்யம்
பஞ்சதிராவிடர் = தெலுங்கர், திராவிடர், கன்னடர், மஹாராஷ்டிரர்,
கூர்ஜரர்
பஞ்சத்துவம் = மரணம்
பஞ்சநதம் = திருவையாறு
பஞ்சபாண்டவர் = தருமன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன்
பஞ்சபாதகம் = சூதாடல், காமம், கள்ளுண்ணல், பொய்மொழிதல், ஈதல் மறுத்தல்
பஞ்சபூதம் = மண், நீர், தீ, காற்று, விண்
பஞ்சம் = ஐந்து, பஞ்சகாலம்
பஞ்சரம் - பரவைக் கூடு, உடம்பு, இடம்
பஞ்சரித்தல் = விரிவாய்ப் பேசல், கெஞ்சிக் கேட்டல்
பஞ்சலட்சணம் = ஐந்திலக்கணம், எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி
பஞ்சலிங்கம் = திருவாரூரில் உள்ள மண்வடிவான லிங்கம்,
திருவானைக்காவில் உள்ள நீர் வடிவான லிங்கம், திருவண்ணாமலையில் உள்ள அக்கினி வடிவான லிங்கம், திருக்காளத்தியிலுள்ள காற்று வடிவான லிங்கம், சிதம்பரத்திலுள்ள ஆகாய வடிவான லிங்கம்
பஞ்சவடி = ஒரு தலம், மயிரினாலான பூணூல்
பஞ்சவன் = பாண்டியன்
பஞ்சவாசம் = ஐந்து வகையான வாசனைப்பொருள்கள், அவை, இலவங்கம், ஏலம், கர்ப்பூரம், சாதிக்காய், தக்கோலம்