பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பண்டம்

267

பதர்


  
பண்டம் = மெய்யுணர்வு, பழம், பொருள், அறிவு, உடல், உண்மை
பண்டர் = அசுரர், பாணர்
பண்டன் = ஆண்தன்மை இல்லாதவன்
பண்டாரசந்நிதி = திருமடத் தலைவர்
பண்டாரம் = பொக்கிஷம், களஞ்சியம், சிவனடியான்
பண்டி = வயிறு, வண்டி யானை, உரோகிணிநாள்
பண்டிதம் = வைத்தியம்
பண்டிதன் = புதன், புலவன், சுக்கிரன், வைத்தியன், அம்பட்டன்
பண்டு = பழமை
பண்டையர் = முன்னோர்
பண்ணவன் = தேவன், கடவுள், குரு, முனிவன், பாணன்
பண்ணியம் = இசைக்கருவி, பண்டம், சோறு, நுகர்பொருள்
பண்ணுவர் = குதிரைப்பாகர்
பண்ணுறுத்தல் = சீர்ப்படுத்தல்
பண்ணை = நீர்நிலை, மகளிர் கூட்டம், மகளிர் விளையாட்டு, வயல், விலங்கின் படுக்கை, சபை, தோட்டம்
பண்ணையார் = மிராசுதார்
பண்ணைவீடு = தானியவீடு
பண்படுதல் = சீர்திருந்தல்
பண்பி = பண்புடைய பொருள்
பண்பு = குணம், தகுதி, அழகு, முறை, நன்மை, செயல்
பண்புரைப்பார் = தூதர்
பதங்கம் = பறவை, விட்டில் பூச்சி
பதங்கன் = சூரியன்
பதச்சேதம்பண்ணுதல் = தொடராய் அமைந்தவற்றைச் சொல், சொல்லாகப் பிரித்தல்
பதடி = பதர், பயன் இன்மை
பதணம் = மதிலுள் மேடை, மதில்
பதநீர் = பனஞ்சாறு
பதப்பாடு = மதில்
பதப்பேறு = பதமுத்தி
பதம் = சொல், பதவி, அடையாளம், இடம், ஈரம், மொழி, சோறு, பக்குவம், மந்திரம், இனிமை, பொருள், பொழுது, முயற்சி, வழி, இசைப்பாட்டு, கள்
பதயுகம் = இணையடிகள்
பதர் = அறிவீனன், பயனற்றது