பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பதலை

268

பத்தயம்


  
பதலை = மலை, சாடி, ஒரு கண்பறை, கலசம், தாழி, தோணி
பதவம் = அறுகு
பதவியது = மிருதுவானது
பதவு = அறுகு, புல், புன்மை , அமைதி
பதவை = வழி
பதனம் = பத்திரம், விழுதல், பாதுகாப்பு, இறக்கம், தாழ்மை, அமைதி
பதனி = பனஞ்சாறு
பதன் = பக்குவம், பதம்
பதாகன் = கொடியுடையவன்
பதாகினி = சேனை
பதாகை = பெருங்கொடி
பதாதி = காலாட்படை
பதார்த்தம் = பதத்திற்குப் பொருள், கறி
பதி = ஊர் அரசன், கடவுள், குதிரை, குரு, கணவன், தலைவன், காப்பவன், நாற்று, கோவில்
பதிகம் = பாசி, பாயிரம், பத்துப்பாடல் கொண்டது
பதிகன் = வழிச்செல்வோன், காலாள்
பதிஞானம் = இறை, அறிவு
பதிதல் = அழுந்துதல், ஒடுங்குதல், கீழ்ப்படிதல், பணிதல், பள்ளமாதல்
பதிதன் = ஒழுக்கத்தில் தவறினவன்
பதிபக்தி = கணவன்மீது வைக்கும் அன்பு
பதிமை = பிரதிமை
பதிவிரதம் = மகளிர் கற்பு
பதிவு = சாய்வு, பதிதல்
பதிவைத்தல் = நாற்றுப் பதித்தல்
பதுக்கம் = கபடம், பதுங்கும் தன்மை
பதுக்கை = கற்குவை, சிறுதூறு
பதுமநாபன் = தாமரை நாபியுடைய திருமால்
பதுமநிதி = தாமரை வடிவாய் அமைந்துள்ள பொக்கிஷம், பெருநிதி
பதுமம் = தாமரை, ஈயம், கோடானுகோடி, ஒருநிதி
பதுமயோனி = பிரமன்
பதுமன் = பிரமன்
பதுமாக்கன் = திருமால்
பதுமினி = முதற்சாதிப்பெண்
பதுமை = இலக்குமி, பாவை, விக்ரகம்
பத்ததி = ஒழுங்கு, வழி, சொற்பொருள், நெறி நூல்
பத்தம் = கட்டு
பத்தயம் = போன்