பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பத்தர்

269

பயம்


பத்தர் = தொட்டி, குடுக்கை, அடியார் பத்தல் = நீர் இறைக்கும் சால், குழி பத்தாயம் = பெட்டி பத்தி = வரிசை, வீட்டிறப்பு, அன்பு, தொண்டு, பக்தி பத்திசாரர் = திருமழிசையாழ்வார் பத்திமை = அன்பு, பக்தி பத்தியம் = பாட்டு, நன்மை பத்திரம் = அழகு, இலை, இறகு, வாள், உடை, உறுதிப்பத்திரம், அழகிய உருவம், அம்பு, நன்மை, பாதுகாப்பு, பொன், எடு பத்திராசனம் = சிங்காசனம் பத்திரி = அம்பு, இலை, குதிரை, பறவை பத்திரை = காளி, நற்பசு பத்திரைகேள்வன் = வீரபத்திரன் பத்தினி = மனைவி, கற்புடையாள் பத்தினிக்கடவுள் = கண்ணகி பந்தணம் - பற்று பந்தம் = உறவு, கட்டு, கை விளக்கு, உடல், திரட்சி, நூல், மயிர்முடி, தொடர்பு பந்தர் = பந்தல் பந்தளம் = கயிறு, கட்டல் பந்தனை = கட்டு பந்தி = வரிசை, குதிரைச்சாலை, ஒழுங்கு பந்தித்தல் = கட்டுதல் பந்து = சுருள், நீர்வீசும் கருவி, சுற்றம் பப்பு = பசப்பு, ஒப்பு பப்புவர் = புகழ்வோர் பமரம் = வண்டு, பேர்ஒலி பம் = நட்சத்திரம் பம்பல் = துளி, களிப்பு, பரந்தவடிவு பம்புதல் = எழுதல், நெருங்குதல், பொலிதல், பரவல், செறிதல், ஒலித்தல், வேடிக்கை செய்தல் பம்பை = சுருண்ட மயிர், முல்லைப்பறை, ஒருநதி பம்மல் = மூடுதல், பின் வாங்குதல் பம்முதல் = மூட்டம் போடுதல், செறிதல் பயசு = நீர், பால் பயத்தல் = கொடுத்தல், விளைதல், பலித்தல், பிறப்பித்தல், பூத்தல், பொறுதல் பயப்பு = கிருபை, நிறம், தேமல், பசப்பு பயம் = அச்சம், நீர், பால், பயன்