பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பயம்பு

270

பரதவர்




   
பயம்பு = பள்ளம், யானை படுகுழி
பயளை = பசப்பு
பயனுரைத்தல் = உரைகூறல்
பயன் = பால், பொருள், பயன்
பயிக்கம் = பிச்சை
பயிர் = பறவைக்குரல்,விலங்கொலி,பசுமை, பயில், வாச்சியம், சைகை, பயிர்
பயிர்தல் = அழைத்தல், இசைத்தல்
பயிர்த்தல் = அமைத்தல், அருவருத்தல்
பயிர்ப்பு = அருவருப்பு, மனம் கொள்ளாமை, பிசின்
பயிலல் = நெருங்கல், பழகல், தங்குதல், கற்றல், சொல்லுதல், நிகழ்தல், ஒலித்தல்
பயில் = சைகை
பயிறல் = ஒலித்தல்
பயினி = இணக்கம், ஒரு பூ
பயின் = குருத்து, பிசின், அரக்கு, பாலேடு, சுக்கான்
பயோததி = பாற்கடல்
பயோதரம் = முலை, மேகம், கடல், பால்
பரகதி = மோட்சம்
பரகாயப் பிரவேசம் = உடல் விட்டு வேறோர் உடலில் புகுதல்
பரகாயம் = பிறசரீரம்
பரகீயம்= பிறர்க்கு உரியது
பரக்கழி = பழி, கீழ்மை
பரக்கழிவு = பழிவிளைதல்
பரசிவம் = கடவுள்
பரசு = கோடரி, மழு, மூங்கில்
பரசுதல் = துதித்தல்
பரசுபாணி = சிவன், பரசுராமன்
பரஞானம் = சிவஞானம், இறைஞானம்
பரஞ்சுடர் = கடவுள்
பரஞ்சோதி = கடவுள்
பரடு = காடு, கணு
பரணம் = தரித்தல், தாங்குதல்
பரணி = நகைப்பெட்டி, பரணிநாள், ஒருவகைப் பிரபந்தம், ஆயிரம் யானைகளைக்கொன்ற வீரமகன் மீது பாடப்படும் நூல்
பரதசாத்திரம் = நடன சாத்திரம்
பரதந்திரம் = சுதந்தரமின்மை
பரதம் = கூத்து, நடன நூல்
பரதர் = செம்படவர், நெய்தல் நிலமக்கள், வணிகம்
பரதவருடம் = பரதகண்டம்
பரதவர் = நெய்தல் நிலமக்கள்