பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பரதனம்

271

பரவசம்


  
பரதனம் = பிறர்பொருள்
பரதாரம் = பிறன் மனைவி
பரதேவன் = கடவுள்
பரத்தர் = தூர்த்தர், காமுகர்
பரத்துவம் = கடவுள் தன்மை
பரத்தை வேசி, வேற்றுப்பெண்
பரந்தாமம் = வைகுந்தம்
பரந்தாமன் = திருமால்
பரபட்சம் = பிறமதத்தர்களில் தன்மைகளைக் கூறும் பகுதி, விரோதம்
பரபதம் = மோட்சம்
பரபத்தி = சிவபத்தி
பரபத்தியம் = பணங்கொடுக்கல் வாங்கல் பண்ணுதல்
பரபோகம் = பேரின்பம்
பரம = சிரேஷ்டமான, பிரதானமான
பரமகதி = மோட்சம்
பரமகுரு = மேலான குரு, ஆசிரியர்க்கு ஆசிரியர்
பரமண்டலம் = வானுலகம்
பரமதம் = பிறசமயம்
பரமபதம் = மோட்சம்
பரமம் = முதன்மை, மேன்மை , முதற்கடவுள்
பரமலோகம் = மோட்சம்
பரமன் = சிவன், கடவுள், பெரியவன்
பரமாகாயம் = வெறுவெளி
பரமாணு = அதிசூட்சம அணு
பரமாத்துமன் = சந்நியாசி, கடவுள், பெருமையிற் சிறந்தவன்
பரமாத்மா = கடவுள்
பரமார்த்தம் = ஞானார்த்தம், மெய்ம்மை, உண்மை அறிவு
பரமான்னம் = சர்க்கரைஉணவு
பரமுத்தி = சாயுச்சியம், மோட்சம்
பரமேஸ்வரன் = கடவுள், சிவன்
பரமேட்டி = பிரமன்
பரம் = கடவுள், பாரம், உடல், முன், மோட்சம், சட்டை, கேடகம், உத்தமம், மேலானது, மேலுலகம், அன்னியம், சார்பு
பரம்பரன் = கடவுள்
பரம்பரை = வரன்முறை, வரிசை முறை, வம்சம்
பரம்பு = வயலைத் திருத்தும் பலகை, வரப்பு
பரம்புதல் = நிறைதல்
பரர் = அன்னியர், பகைவர்
பரல் = விதை, பருக்கைக்கல்
பரவசம் = தன்வசமற்றிருத்தல், பிரமை, மூர்ச்சைமிகுகளிப்பு