பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பரிபாலனம்

274

பரூஉக்கை




  
பரிபாலனம் = ஆளுகை, காத்தல்
பரிபுரம் = காற்சிலம்பு
பரிபூரணம் = முழு நிறைவு
பரிபூரணன் = கடவுள்
பரிப்பு = இயக்கம், தாங்குதல்
பரிமாணம் = அளவு
பரிமா = குதிரை
பரிமிதம் = எல்லை , அளவுபட்டது
பரிமுகமாக்கள் = கின்னரர்
பரிமேயம் = அளவுபட்டது
பரியகம் = கிங்கிணி
பரியங்கம் = கட்டில்
பரியம் = மணப்பரிசு
பரியவசானம் = முடிவு
பரியாயச்சொல் = ஒரு பொருள் குறித்த மறுசொல்
பரியாய நாமம் = ஒரு பொருட்கு இனமாய் இருப்பது
பரியாயம் = ஒழுங்கு முறை, பிரதீபதம்
பரியாரம் = பரிகாரம்
பரிவட்டம் = சீலை, விக்கிரக உடை, துண்டு, ஆடை
பரிவருத்தனம் = பொருள் மாற்றுதல்
பரிவாதம் = அபவாதம்
பரிவு = அன்பு, துன்பம், இரக்கம்
பரிவேடம் = சந்திர, சூரியரைச் சுற்றித் தோன்றும் வட்டம்
பரிவேட்பு = வட்டம்
பரிஷ்காரம் = விமரிசை, தெளிவு, உறுதி
பரீஇ = பருத்தி
பருங்கை = பெருஞ்செல்வம்
பருணிதர் = புலவர்
பருதி = சூரியன், வட்ட ம், தேருருள்
பருந்தாட்டம் = பெருந்துன்பம்
பருப்பதம் = மலை
பருப்பம் = பருமை
பருமம் = கவசம், கல்லணை, மேகலை, அரைப்பட்டிகை, யானைக் கழுத்திடும் மெத்தை
பருமித்தல் = அலங்கரித்தல், படைக்கலம் பயிலல், சிரமஞ் செய்தல்
பருவதம் = மலை, மீன்வகை
பருவதவர்த்தனி = பார்வதி
பருவம் = இளமை, காலம், பக்குவம், பூரணை, பொழுது, வயது
பருவரல் = துன்பமுறல், துன்பம், பொழுது
பருவி = பருத்தி
பரூஉ = பருமை
பரூஉக்கை = வண்டியின் ஓர் உறுப்பு