பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பரேர்

275

பல்லி


  
பரேர் = மிக்க அழகு
பரை = பார்வதி, ஐந்து மரக்கால் அளவு
பரோட்சம் = காணப்படாதது
பர்க்கன் = சிவபெருமான், சூரியன்
பர்ணசாலை = இலைகளால் அமைந்த குடில்
பர்ணம் = இலை
பர்வதாக்கிரம் = மலையுச்சி
பலகணி = சன்னல்
பலகாரம் = யானைமேல் தவிசு
பலகை = கேடகம், யானை மேல் தவிசு, அப்பவகை
பலசித்தி = பலபேறு
பலதுறை = பலவழி
பலத்தியாகம் = பலனை விடுதல்
பலபட்சணம் = கனியுணவு
பலபத்திரன் = பலராமன்
பலப்பம் = மாக்கல்
பலப்பிராப்தி = பலசித்தி
பலம் = கிழங்கு, பயன், பழம், வலி, நெற்றி, சேனை, வன்மை, உறுதி, எடை
பலரறிசொல் = அலர்மொழி, பெருஞ்சொல்
பலவு = பலாமரம்
பலாகம் = கொக்கு
பலாசம் = இலை, பசுமை, பலா, புனமுருக்கு
பலாயனம் = புறங்காட்டுதல்
பலாலம் = வைக்கோல்
பலி = மாமிசம், பூசை, காக்கை, சாம்பல், பிச்சை, தேவர் உணவு, ஒரு சக்கிரவர்த்தி, அர்ச்சனைப் பூ
பலிதம் = நரைமயிர், கனியுள்ளது, பலிப்பது
பலிதை = கிழவி
பலிபுட்டம் = காக்கை
பலினம் = காய்த்திருக்கும் மரம்
பல்கணி = நுழைவாயில்
பல்காழ் = மேகலை
பல்காற்பறவை = வண்டு
பல்குதல் = மிகுதல், பலவாதம்
பல்லணம் = குதிரைக் கல்லணை
பல்லம் = கரடி, அம்பு, ஒரு பேரெண்
பல்லவம் = தளிர், விசாலித்தல், அம்பு, ஒருநாடு
பல்லவர் = பலர், தூர்த்தர் கீழ்மக்கள், ஒரு சாதியார்
பல்லாண்டு = வாழ்த்து
பல்லி = சிற்றூர், இடையர், ஊர், வண்டியுறுப்பு, பல்லி, உழுகருவி