பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பல்லியம் 276

பழுமரம்


பல்லியம் 27


பல்லியம் = வாத்தியம்,சங்கீதம்
பல்லுகம் = கரடி
பல்லூழி = அநேகயுககாலம்
பல்லூழ் = பலமுறை
பல்வலம் = சிறுகுளம், கிணறு
பல்வலிப்பறவை = சரபம்
பவசாகரம் = பிறவிக்கடல்
பவஞ்சம் = உலகம்
பவணம் = நாகலோகம்
பவதி = பார்வதி
பவமானன் = வாயு
பவம் = பிறப்பு, பாவம், மரம், உலகம், இருத்தல்
பவர் = கொடி, பாவிகள், நெருக்கம்
பவர்க்கம் = நரகம்
பவர்தல் = பரத்தல், கூடுதல், நெருங்கியிருத்தல்
பவளம் = இராசி, பூமி, வீடு, காற்று, சுவர்க்கம், விமானம்
பவனன் = காற்று
பவனாசனம் = பாம்பு
பவனி = உலாப்போதல்
பவன் = கடவுள்- சிவன்
பவானி = பார்வதி, காவிரியின் கிளைநதி
பவிஷு = செல்வம், மானம்

6 பழுமரம்
பவித்திரம் = தருப்பை, தருப்பை மோதிரம், தூய்மை, மோதிரம், பூணூல், நெய், தேன்
பவிஷயம் = எதிர்காலம்
பவுஞ்சு = சேனை
பவுதிகம் = ஐம்பூதசம்பந்தமானது
பவுரி = ஒரு கூத்து
பவ்வம் = கடல், பருவம், நுரை
பவ்வியம் = தாழ்மை, அடக்கம்
பழங்கண் = துன்பம், மெலிவு ,
பழமலை = விருத்தாசலம்
பழம்பொருள் = கடவுள்
பழனமாக்கள் = பள்ளர்
பழனம் = மருதநிலம், வயல், பொய்கை
பழிசை = இகழ்ச்சி
பழிச்சுதல் = துதித்தல், வாழ்த்தல், வணங்குதல்
பழு = விலாஎலும்பு, பேய், ஏணியின் படிச்சட்டம்
பழுக்கா = பொன்னிறம்
பழுக்காய் = ஒருநிறம், பாக்கு
பழுது = உடம்பு, குற்றம், சிதைவு, பயன் இன்மை
பழுதை = கயிறு, வைக்கோற்புரி
பழுமரம் = ஆலமரம்