பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பழுவம்

277

பற்சன்னியன்


பழுவம் = காடு, கூட்டம்
பழை = கள்
பழமை பாராட்டல் = பழைய உரிமைகளை எடுத்துப் பேசுதல்
பழையர் = கள்விற்போர்
பழையோள் = காடுகிழாள், காளி
பளகு = குற்றம், முடத்தனம்
பளக்கு = கொப்புளம்
பளிங்கு = கண்ணாடி, சுக்கிரன், கர்ப்பூரம், படிகம் பளிதம் = கருப்பூரம், பச்சடி, பாற்சோறு, ஒருபேரெண்
பள்குதல் = பதுங்குதல்
பள்ளர் = உழவர்
பள்ளி = இடைச்சேரி, புத்தர்கோயில், மருதநிலத்தூர், வேலைசெய்யும் இடம், குறும்பன், படுக்கை, பள்ளிக்கூடம், கோவில், உறக்கம், சிற்றூா், ஊர், வன்னியன்,முனிவர் வாழ்இடம்
பள்ளிக்கணக்கர் = கற்பவர்
பள்ளித்தாமம் = கோயிலில் சாத்தும் மாலை
பள்ளியந்துலா = படுக்கைப்பல்லக்கு
பள்ளியெழுச்சி = உறக்கம் விட்டு எழுதல்
பள்ளு = உழவுப் பாட்டு பள்ளை = ஆடு பள்ளையம் = சிறுதெய்வ ஆராதனை, உண்கலம்
பறட்டை = வளமற்றது
பறண்டுதல் = சுரண்டுதல்
பறண்டை = ஒரு வாத்தியம், கையின் முட்டி
பறத்தல் = அவசரம் பண்ணல், கிளர்தல், விரைவில் ஓடல்
பறந்தலை = சுடுகாடு, போர்க்களம், பாழ்இடம், படைவீடு
பறப்பன் = தேள்
பறப்பை = பறவை, யாக வேதிகை
பறம்பா்= தோல்வினைஞர்
பறம்பி = மோசக்காரி
பறல் = பறவை
பறழ் = குட்டி
பறளை = குறடு, தகடு
பறி = பொன், கொள்ளை, வலை, ஓலைப்பாய், உடம்பு
பறிதல் = வெளிப்படல், கட்டவிழ்தல், உண்டாதல்
பறை = இறகு, சொல், வாத்தியம், பறவை, அழிகை
பறைதல் = சொல்லுதல், அழிதல், தேய்தல்
பறையலகு = பலகறை
பற்குணன் = அர்ச்சுனன்
பற்சன்னியன் = வருணன்