பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பற்பதம்

278

பஃறுளியாறு


பற்பதம் = மலை
பற்பம் = தாமரை, தூள்
பற்றலர் = பகைவர்
பற்றாக்கை = அம்புகளைக் கட்டும் கயிறு
பற்றற்றார் = முனிவர்
பற்றாசு = உலோகங்களை இணைக்கப் பயன்படுத்தும் இடையிடும் துண்டு
பற்றார் = பகைவர்
பற்று = அன்பு, ஆசை, சிற்றூர், வயல், பசை, நட்பு, பிடி, வாரப்பாடல், செல்வம்
பற்றுக்கோடு = ஊன்றுகோல், கட்டுத்தறி
பற்றுவரவு = கொடுக்கல், வாங்கல்
பற்றுள்ளம் = உலோபம்
பற்றை = செங்காந்தள், சிறுபுதர்
பனசம் = பாலாமரம் முள்
பனவன் = பிராமணன்
பனாட்டு = பனங்கனியில் அட்டது
பனி = துன்பம், குளிர், சொல், அச்சம், நடுக்கம், பயம், நோய், நீர்த்துளி, இனிமை
பனிக்கதிர் = சந்திரன்
பனிச்சை = பின்னி முடிக்கும் மயிர்ச்சுருள், பெண்மயிர்
பனித்தல் = நடுங்கல், துளித்தல், வடிதல், வருந்துதல், அடித்தல்
பனிப்பகை = சூரியன்
பனிமொழி = குளிர்ந்த வார்த்தை, பெண்
பனிவரை = இமயமலை
பனிற்றல் = தூவல்
பனுவல் = நூல், கேள்வி, அறநூல், பஞ்சு, பாட்டு, சொல், கல்வி, ஆராய்ச்சி
பனுவலாட்டி = சரஸ்வதி
பனைக்கொடியோன் = பலராமன்
பன் = அரிவாள், பல
பன்றி = ஒரு கொடுந் தமிழ்நாடு, பன்றி
பன்றிப்பந்தர் = பன்றிக் கூழ்த் தொட்டி
பன்னகம் = பாம்பு, இலை
பன்னகாபரணன் = சிவன்
பன்னம் = இலை
பன்னல் = பருத்தி, சொல், ஆராய்தல்
பன்னி = சீப்பு, பனிநீர், பத்தினி
பன்னுதல் = சொல்லுதல், ஆராய்தல், தேர்தல், நெருங்குதல், பின்னுதல், புகழ்தல்
பஃறி = ஓடம், மரக்கலம்
பஃறுளியாறு = குமரியாற்றுக்குத் தெற்கே ஓடிய ஆறு