பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

279


பா = பரப்பு, பாட்டு, சுத்தம், காத்தல், பஞ்சி நூல்
பாகசாதனன் = இந்திரன்
பாகசாதனி = அருச்சுனன், இந்திரன் மகன்
பாகசாலை = மடைப்பள்ளி
பாகடை = பாக்கு, வெற்றிலை
பாகம் = பிச்சை, பாதி, பங்கு, பக்குவம், பக்கம், சமையல்
பாகலம் = யானை நோய்
பாகல் = பலா, ஒரு கொடி
பாகர் = தேர், தேர்க்கைப்பிடி, யானைப் பாகர்
பாகாரி = இந்திரன்
பாகியம் = புறம்பானது
பாகீரதி = கங்கை
பாகு = குழம்பு, சருக்கரை, பகுதி, பாகன், பாக்கு, பால், பிச்சை, கரை, புயம், அழகு
பாகுடம் = கப்பம், கையுறை
பாக்கம் = ஊர், கடற்கரையூர், அரசன் இருப்பிடம், பக்கவூர், பட்டினம், மருதநிலவூர்
பாக்கன் = பூனை
பாங்கர் = பக்கம், ஓமைமரம்
பாங்கன் = தோழன்
பாங்கு = அழகு, உரிமை, பாங்கன், தகுதி, மாதிரி, நன்மை, தன்மை, பக்கம்
பாசகன் = அக்னி, சமையற்காரன்
பாசஞானம் = உலக அறிவு
பாசடை = பச்சிலை
பாசண்டம் = வேத ஒழுக்கத்திற்கு வேறான சமயம்
பாசதரன் = வருணன், எமன்
பாசபந்தம் = வலை, மலபந்தம்
பாசபாணி = சிவன், எமன், வருணன்
பாசமோசனம் = பாசநாசம்
பாசம் = அன்பு, கயிறு, வலை, சுற்றம், பாசி, பிசாசம், மாயை, தளை
பாசவர் = கயிறு திரித்து விற்பவர், இறைச்சி இலை விற்பவர்
பாசறை = கூடாரம், போருக்கு சென்றவர் வெளியில் அமைத்துக் கொண்ட இடம், துன்பம், இலை அடர்ந்த குகை
பாசனம் = வெள்ளம், சுற்றம், உண்கலம், உறவு, பாத்திரம்
பாசாங்குசதரன் = விநாயகன்
பாசி = நாய், நீர்ப்பாசி, கரிய மணி, கிழக்கு
பாசிலை = பசுமையான இலை, வெற்றிலை
பாசினம் = கிளிக்கூட்டம்
பாசு = பசுமை, மூங்கில்,பாசம், தைரியம்