பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாணி

281

பாதாளம்


பாணி = ஓசை, காலம், கை, தாளம், நீர், அழகு, அன்பு, தாமதம், கூத்து, சொல், நாடு, நீர், பாட்டு, பக்கம்
பாணிகொட்டல் = கைத்தட்டல்
மணிகிரகணம் = கைப்பற்றல், விவாகம்
பாணித்தல் = தாமதித்தல், பின் வாங்குதல்
பாணிநீயம் = பாணினி முனிவர் செய்த வடமொழி இலக்கணம்
பாணிமுகம் = உடல் விட்டு உயிர் போகும் முறை
பாணு = பாட்டு
பாணி = இசைப்பாட்டு, காலம், தாளம், கூத்து, அழகு, கை, பக்கம், நீர், சொல், ஊர், ஓசை, தாமதம், காலம், அன்பு, நாடு, பாட்டு, செவ்வி
பாண்டரங்கம் = சிவனார் கூத்து
பாண்டரங்கன் = சிவன்
பாட்டன் = பழமை, துர்நாற்றம்
பாண்டவர் = பஞ்சபண்டவர்
பாண்டாகாரம் = பண்டசாலை
பாண்டி = எருது, மாட்டு வண்டி, பாண்டியநாடு
பாண்டித்தியம் = புலமை
பாண்டியம் = எருது, உழவு,பாண்டியநாடு
பாண்டில் = அகலம், எருது, கிண்ணி, கட்டில், தாளம், குதிரைச் சேணம், விளக்குகால், வண்டி வட்டம், வாகைமரம், நாரை யெருது
பாண்டில் விளக்கு = பாதவிளக்கு
பாண்டு = வெண்மை, ஓர் அரசன், ஒருவகை நோய்
பாண்டுகம்பளம் = இந்திரன் ஆசனம்
பாண்டுரம் = வெண்மை
பாதக்குறடு = மிதியடி
பாதங்கம் = சாம்பல், பொடி
பாதாரம்}
பாதசாலம்} = ஒரு காலணி
பாததாடனம் = உதை
பாதபம் = மரம்
பாதம் = மரவேர், நீர், செய்யுளடி, கால்
பாதவம் = தோட்டம், மரம், மலை, தோப்பு
பாதானம் = வணக்கம், கீழ் முகம்
பாதாதிகேசம் = அடி முதல் சிரசு வரை
பாதாளமூலிகை = நெருஞ்சில்
பாதாரவிந்தம் = பாத தாமரை
பாதாளம் = நரகம், பிலம்

36