பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாதிடுதல்

282

பாரமார்த்திகம்


பாதிடுதல் = பங்கிடுதல்
பாதீடு = காத்தல், பங்கீடுதல்
பாதேயம் = கட்டுச் சோறு
பாதை = மரக்கலம், துன்பம், முறை, வழி
பாதோதகம் = பாதநீர்
பாத்தல் = பங்கிடுதல்
பாத்தி = பயிர் இடும் மேடை
பாத்தியம் = திருவடி அலம்பக் கொடுக்கும் நீர், உரிமை
பாத்திலார் = வேசியர்
பாத்து = இணை, சோறு, நீக்கம், ஐம்புல இன்பம், பங்கு
பாந்தம் = இணக்கம், ஒழுங்கு
பாந்தவம் = உறவுமுறை
பாந்தள் = பாம்பு
பாந்தன் = வழிச்செல்வோன்
பாபாகிதன் = பாவமற்றவன்
பாபவிமோசனம் = பாவநீக்கம்
பாவமகள் = சரஸ்வதி
பாமடந்தை = சரஸ்வதி
பாமம் = பரப்பு, பிரபை, புண், கோபம்
பாமரம் = மூடத்தனம், இழிவு
பாமினி = பெண்
பாமுதல்வி = சரஸ்வதி
பாம்பு = ஆயில்யம், வரம்பு
பாம்புரி = அகழி
பாயசம் = பாற்சோறு
பாயம் = மனதிற்கு விருப்பமானது, புணர்ச்சி, விருப்பம்
பாயல் = படுக்கை, உறக்கம்,பாதி
பாயிரம் = முகவுரை, வரலாறு
பாயுரு = குதம், மலம் கழி வாயில்
பாய்ச்சல் = பெருக்கல்
பாய்மா = குதிரை, புலி
பாரகம் = பூமி, திரைச் சீலை
பாரகன் = கரைகண்டவன், தாங்குபவன்
பாரங்கதன் = கல்வியில் கரை கண்டவன், தாங்குபவன்
பாரசிகை = பருந்து
பாரணம் = விரதமிருந்துண்டல், மேகம், திருப்தி
பாரதர் = குருகுல வேந்தர்
பாரதவருஷம் = பாதகண்டம்
பாரதி = சரஸ்வதி, சொல், பண்டிதன், மரக்கலம்
பாரதியரங்கம் = சுடுகாடு
பாரத்துவாசம் = கரிக்குருவி
பாரபத்தியம் = அதிகாரம், மேல் விசாரணை
பாரமார்த்திகம் = பரமார்த்த சம்மந்தமானது