பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரம்

283

பாலை



பாரம் = கரை, கவசம், சுமை, கனம், பருத்தி, தோணி, பொறுப்பு, பெருங் குடும்பம், பருத்திச்செடி
பாரம்பரியம் = வழிவழியாய் வந்தது, ஐதிகம்
பாராசரி = வியாசன்
பாராசாரி = பாரிக்குதிரை
பாராயணம் = நியமமாகப் படித்தல்
பாராவதம் = புறா
பாராவளை = சுழல் தடி
பாராவாரம் = கடல், கடற்கரை
பாரி = கடை ஏழு வள்ளல்களில் ஒருவன், கட்டில், நல் ஆடைகள், பூமி, ஊர், பெரிது, மனைவி, சிங்கம்,கள்
பாரிசம் = பக்கம், திசை, வசம்
பாரிசாதம் = ஒருதேவதாரு, பவள மல்லிகை
பாரிசேடம் = எஞ்சியது
பாரிடம் = பூதம், பூமி
பாரித்தல் = உண்டாக்கல், சுமத்துதல், பரப்பல், பருத்தல், காத்தல், தோன்றுதல், வளர்த்தல், அணிதல், சுமையாதல், வளைத்தல்
பாரை = கடப்பாரை
பார் = பூமி, தடை, பாறை, தேரின்பரப்பு, வன்னிலம், தட்டு, பருமை
பார்க்கவன் = சுக்கிரன், பரசுராமன்
பார்க்கவி = பார்வதி, திருமகள்
பார்சுவம் = பக்கம், விலா
பார்த்தன் = அருச்சுனன்
பார்த்திபன் = அரசன்
பார்ப்பு = பறவைக் குஞ்சு
பார்வல் = பார்த்தல், காவல், பகைவரது வருகையைப பார்க்கும் அரண் உச்சி, பார்வை மிருகம்
பார்வை = கவனம், கண், மதிப்பு, சூனியம்
பாலடி = பாற்சோறு
பாலமை = அறியாமை
பாலம் = நெற்றி, மழு, பூமி
பாலலோசனன் = நெற்றிக்கண்ணன், சிவன்
பாலலோசனி = உமை
பாலனம் = காத்தல்
பாலாட்சன் = சிவன், நெற்றிக் கண்ணன்
பாலார்க்கன் = இளஞ்சூரியன்
பாலி = பாலாறு, ஒருபழையமொழி
பாலிகை = உதடு, கத்திப்பிடி
பாலித்தல் = ஈதல், காத்தல்
பாலை = பிரிவு, பாலைநிலம், பாலைப்பண், மிருக சீருட நாள்