பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாறுதல்

285

பிஞ்ஞை



பாறுதல் = ஓடுதல், அழிதல், சிதறுதல், நீங்குதல், ஒழுங்கறுகல்
பாறை = திட்டை
பாற்கரன் = சூரியன், ஒளியுள்ளவன்
பாற்குணம் = பங்குனி
பாற்பட்டார் = துறவியர் நல்லமுறையில் நடப்பவர்
பாற்றுதல் = நீக்குதல், ஒட்டுதல்
பான பத்திரம் - கிண்ணம்
பானல் = கருங்குவளை மலர், வயல்
பானாள் = பாதி இரவு
பானித்தல் = குடித்தல்
பானீயம் = நீர்
பானு = சூரியன், ஒளி
பான்மை = தன்மை, தகுதி, ஊழ், நல்வினைப்பயன்
பாஸ்கரன் = சூரியன்
பாஷாந்தரம் = பிறபாஷை

பி



பிகம் = குயில்
பிக்குணி = பௌத்தப் பெண் துறவி
பிங்கலம் = குரங்கு, பொன், வடக்கு, பொன்நிறம்
பிங்கலன் = குபேரன்
பிங்கலை = பார்வதி, வலமூக்கு வழியே வரும் சுவாசம்
பிங்குசம் = தலைக்கோலம்
பிசி = அரும்பொருள், சோறு, பொய், விடுகதை
பிசிதம் = ஊன், வேம்பு, நீறு
பிசிதானன் = இராக்கதன்
பிசிர் = துளி, மழை
பிசினம் = கோட் சொல்
பிசுனம் = காகம், உலோபம், பொய், கோள்
மிச்சம் = ஆண் மயிர், வெண்குடை, வால், மயில் தோகை
பிச்சாடனம் - பிச்சைக்குத் திரிதல்
பிச்சி = முல்லை
பிச்சியார் = சைவத் தவப் பெண்
பிச்சு = பித்து
பிஞ்சகம் = தலையலங்காரம்
பிஞ்சம் = இறகு, மயில் தோகை
பிஞ்ஞகன் = சிவபெருமான், சங்காரம் செய்பவன்
பிஞ்ஞை = நப்பின்னைப் பிராட்டியார்