பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிடகம்

286

பிதிர்க்கடன்




  
பிடகம் = பௌத்தாகமம், ஓலைப்பெட்டி, பிச்சை, கூடை
பிடகன் = வைத்தியன், புத்தன்
பிடகை = பூங்கூடை, பூந்தட்டு
பிடல் = கதவு
பிடி = பெண் யானை, பற்று, உறுதி, தர்ப்பை
பிடியல் = சிறுதுகில்
பிட்குதல் = கத்துதல்
பிட்டம் = இடித்தமா, ஈயம், பிருஷ்ட பாகம்
பிணக்காடு = யுத்தகளம்
பிணக்கு = சண்டை, நெருக்கம், மாறுபாடு
பிணங்குதல் = வெறுத்தல்
பிணர் = கோங்கு, சமம், இல்லா வடிவு
பிணவு = பெண், விலங்கின் பெண்
பிணா = பிணவு, பெண்
பிணி = கட்டு, நோய், துன்பம், பின்னல்
பிணிதல் = சாதல்
பிணிமுகம் = அன்னம், மயில், பறவை, முருகன், யானை
பிணியகம் = காவல்
பிணை = ஆசை, கட்டு, பூமாலை, இணைமான்
பிணைதல் = கலத்தல்
பிணைத்தல் = கட்டல், தொடுத்தல்
பிணையல் = மாலை
பிண்டக்காப்பு = சோறு
பிண்டப்பிரசாதம் = பிதிர் பூசை
பிண்டப்பொருள் = சடப்பொருள், தொகுக்கப் பட்டபொருள்
பிண்டம் = உடல், கர்ப்பம், கவளம், பிச்சை, பிதிர்களுக்கு இடும் அன்னத் திரட்சி
பிண்டவுரை = பொழிப்புரை
பிண்டரி = கொள்ளைக்காரன்
பிண்டி = அசோகமரம், அரிசி, மா, புனர்பூசம், வடிவம்
பிண்டிகை = கடிவாளம்
பிண்டித்தல் = திரளல்
பிண்டிபாலம் = எறி ஆயுதம்
பிதா = தந்தை, பிரமன்
பிதாமகன் = பாட்டன், பிரமன்
பிதிசாரம் = பரிகாரம்
பிதிராச்சிதம் = முன்னோர் ஈட்டி வைத்த பொருள்
பிதிர் = கதை, திவலை, பொடி, துண்டம், பொறி, சேறு, தந்தை, தென்புலத்தார், மூதாதையர், தேமல்
பிதிர்க்கடன் = இறந்தவர்க்குச் செய்யும் கடன்