பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அற்றார்

26

அஃறிணை


அற்றார் = தரித்திரர், முனிவர்
அற்று = அத்தன்மைத்து, அவ்வளவு, போலும்
அற்றைநாள் = அந்த நாள்
அனகம் = பாவமற்றது, புல்லுருவி
அனங்கன் = மன்மதன்
அனந்தம் = பொன், ஆகாயம், ஒரு பேரெண், அளவின்மை
அனந்தர் = தூக்கம், மயக்கம், உணர்ச்சி
அனந்தல் = தூக்கம், மயக்கம், மதம்
அனிச்சம் = மோந்தால் வாடும் ஒருவகைப் பூ
அனிச்சை = நாகமல்லி
அனுபூதி = அனுபவ அறிவு
அனிலம் = காற்று
அனீகம் = சேனை
அனுக்கம் = சோம்பல், வாட்டம், அச்சம், வருத்தம், கேடு, நோய்
அனுப்பிராசம் = வழியெதுகை
அனுமானித்தல் = சந்தேகப்படுதல்
அனுயோகம் = கேள்வி
அனை = அத்தனை
அனைத்து = அவ்வளவு, அத்தன்மையது, எல்லாம்
அன்பு = பற்று, சிவம்
அன்மை = தீமை, அல்லாமை
அன்றில் = ஒரு பறவை, மூல நட்சத்திரம்
அன்னசுத்தி = நெய்
அன்னணம் = அப்படி
அன்னப்பிராசனம் = சோறு ஊட்டுதல்
அன்னம் = சோறு, கவரிமான், அன்னப்பறவை
அன்னவம் = கடல்
அன்னவூர்தி = பிரமன்
அன்னியபுட்டம் = குயில்
அன்னோன்றி = வலியற்றவன்
அஃகம் = விலைப்பொருள், முறைமை, ஊற்று நீர், தானியம்
அஃகரம் = வெள்ளெருக்கு
அஃகுதல் = குறைதல், நுணுகுதல், சுருங்குதல்
அஃகுல்லி = சிற்றுண்டி, பிட்டு
அஃகேனம் = முள் இல்லாப் பன்றி, ஆய்த எழுத்து
அஃதான்று = அதுவல்லாமல்
அஃது = அது
அஃதை = ஆதரவற்றவன், அகதி
அஃறிணை = உயர்திணை அல்லாதது