பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிதிர்நாள்

287

பிரஞ்ஞை


  
பிதிர்நாள் = அமாவாசி, இறந்தோர் நாள்
பிதிர்வழி = பிதா வமிசம்
பிதிர்வனம் = சுடுகாடு
பித்தளை = செம்பும் துத்தநாகமும் கலந்த உலோகம்
பித்தி = சிறுசண்பகம், சுவர், பங்கு
பித்திகை = சிறுசண்பகம், சுவர், சாதி மல்லிகை
பித்தை = தலைமயிர்
பிந்து = புள்ளி, விந்து, துளி
பிபீலிகை = எறும்பு
பிப்பலம் = அரசு, நீர்
பியல் = பிடர்
பிரகடம் = வெளிப்படை
பிரகரணம் = அத்தியாயம், ஆயுதம்
பிரகஸ்பதி = தேவகுரு
பிரகாண்டம் = அடிமரம்
பிரகாரம் = ஒப்பு, விதம்
பிரகிருதி = இயல்பு, பகுதி, பஞ்ச பூதம், பிரதானம், பிரபஞ்ச மூலமாயிருக்கும் மாயை, வலி, மறைவு
பிரக்கினை = அறிவு, உணர்வு, பிரஞ்ஞை
பிரசண்டமாருதம் = பலத்த காற்று
பிரசண்டம் = மிகுவெப்பம், மிகுவேகம், வலிமை, கடுமை
பிரசித்தி = புகழ்
பிரசம் = தேனீ, தேன், வண்டு, பூந்தாது
பிரசம்சை = புகழ்ச்சி
பிரசரம் = வேகம், வெளியாதல்
பிரசன்னம் = மகிழ்வு, காட்சி, தூய்மை
பிரசாதம் = அருள், களங்கமின்மை, நிவேதித்த பொருள்
பிரசாபதி = அரசன், பிரமன்
பிரசாபத்தியம் = பெண் சுற்றமும் ஆண் சுற்றமும் ஒத்துத் தீமுன்னர்ச் செய்யும் மணம்
பிரசாரணம் = விரித்தல்
பிரசாரம் = பாவச் செய்கை, வெளியீடு
பிரசினம் = கேள்வி
பிரசுரன் = சுக்கிரன்
பிரசூதம் = பிள்ளை பெறுதல்
பிரசை = குடி, கனம், சந்ததி
பிரஞ்ஞன் = அறிஞன்
பிரஞ்ஞாபங்கம் = அறிவு, கேடு
பிரஞ்ஞை = அறிவு, சரஸ்வதி