பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிரஷ்டம்

288

பிரமசூத்திரம்


பிரஷ்டம் = தள்ளுபடி
பிரஷ்டன் = வழுவினவன்
பிரடை = முறுக்காணி
பிரட்டபம் = முதன்மை, தள்ளுதல்
பிரணயம் = அன்பு, கீழ்ப்படிதல்
பிரணவம் = ஓங்காரம்
பிரதானம் = கீர்த்திபிரகாசம், பெருமை, வெப்பம், வீரம்
பிரதி = பதில், ஒத்ததன்மை
பிரதிட்டை = சடங்கு, தாபனம்
பிரதிநிதி = ஒத்த வடிவம், சமமாக வைக்கப்பட்டது
பிரதிபந்தம் = தடை
பிரதிமானம் = யானைக்கொம்பின் நடு
பிரதிமை = விக்கிரகம், ஒத்த நடு
பிரதிலோமன் = இழிந்த ஆணிற்கும் உயர்ந்த பெண்ணிற்கும் பிறந்தோன்
பிரதீகம் = அவயவம், பிண்டம்
பிரதீகி = மேற்கு
பிரதேசம் = இடம்
பிரஸ்தாபம் = குறித்துச் சொல்லுகை
பிரதோடம் = பிரதோஷம், மாலைக் காலம்.
பிரஸ்தாபித்தல் = குறித்துச் சொல்லுதல்
பிரஸ்தாவனை = கட்டியம், துவக்கம்
பிரத்தியக்கம் = கண்கூடு
பிரத்தியக்கு = மேற்கு
பிரத்தியாக்கியானம் = தள்ளுதல், மறுத்தல்
பிரபஞ்சம் = உலகம், விசாலம்
பிரபஞ்ச வைராக்கியம் = உலக வெறுப்பு
பிரபந்தம் = பாமாலை, நூல், திவ்யபிரபந்தம்
பிரபலம் = முக்கியம், மிகு வலி
பிரபன்னம் = அடைதல்
பிரபாகரன் = சூரியன், சந்திரன், அக்கினி
பிரபாவம் = ஒளி, மகத்துவம், வன்மை, கீர்த்தி
பிரபுத்துவம் = மகத்துவம்
பிரஞை = ஒளி, துர்க்கை
பிரபுத்தன் = இளைஞன்
பிரபோதம் = நற்புத்தி, துயிலின்மை, பேரறிவு
பிரப்பு = கலத்தில் வைத்த பல்லுணவு, பேருண்டி
பிரமகத்தி = பிராமணக் கொலை
பிரமகுலம் = பிராமணசாதி
பிரமசார்யம் = கற்று விரதங்காத்து விவாகமின்றி இருக்கும் நிலை
பிரமசூத்திரம் = முப்புரிநூல், வேதாந்த சூத்திரம்