பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிரமஞானம்289

பிரயாகை


பிரமஞானம்

பிரமஞானம் = கடவுளை யறியும் அறிவு
பிரமணம் = சுழற்சி
பிரதகணம் = கைலாயத்திலிருக்கும் பக்த சமூகம்
பிரமதண்டம் = பிராமணர்க்குரிய கோல்
பிரமதாயம் = வரியில்லாமல் பிராமணர்க்குக் கொடுக்கும் நிலம்
பிரமபுரம் = சீர்காழி
பிரம்மணம் = பிரமசாரிக்குக் கன்னியைத் தீ முன்னர்க் கொடுக்கும் மணம்
பிரமம் = கடவுள், மந்திரம், தவறு, சுழல் காற்று, முத்தி, யாகம், வேதம், கலக்கம், சுழற்சி
பிரமயாகம் = வேதமோதல்
பிரமரந்திரம் = சிரத்தின் உச்சித் துவாரம்
பிரமரம் = வண்டு
பிரமராட்சதன் = துர்மரணமடைந்த பிராமணப் பேய்
பிரம்மராயன் = பார்ப்பன மந்திரி
பிரமரி = கூத்து, விகற்பம், சுழலல்
பிரமலிபி = பிரமாவின் எழுத்து
பிரமலோகம் = சத்தியலோகம்
37 பிரயாகை

பிரமவமிசம் = பிராமணச் சாதி
பிரமாணம் = அளவை, ஆணை, மெய்யுணர்வு, முகாந்தரம், விதி
பிரமாண்டம் = உலகம், காத்திரம், ஒரு புராணம், மிகப் பெரியது
பிரமாதம் = தவறல், மதியீனம், அளவுகடந்த அபாயம்
பிரமாத்திரம் = பிரமாஸ்திரம், பிரமபாணம்
பிரமானந்தம் = பேரின்பம்
பிரமி = ஒரு பூடு, சுழல்காற்று
பிரமிதம் = அறியப்பட்டது
பிரமிதி = மெய்யறிவு
பிரமித்தல் = அதிசயத்தாலும் அச்சத்தாலும் விறைத்தல், திகைத்தல்
பிரமுகம் = மேன்மை, பிரதானம், சிறந்தது
பிரமுகன் = முக்கியன்
பிரமேயம் = அளவிடப்படுவது
பிரமை = மயக்கம்
பிரமோதம் = பெருமகிழ்ச்சி
பிரம்பு = சூரல், தேர்முட்டி
பிரயாகை = கங்கை, யமுனை சரஸ்வதி, யென்னும் மூன்றும் கூடு மிடத்திலுள்ள ஒரு புண்ணிய ஷேத்திரம்