பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிரயாசம் 290

பிராயம்


பிரயாசம்

பிரயாசம் = முயற்சி, வருத்தம்
பிரயோகம் = மருந்து, ஏவல், செலுத்துகை
பிரலாபம் = புலம்புகை
பிரவரம் = வமிசம்
பிரவர்த்தனம் = செய்கை
பிரவாகம் - நீர்ப்பெருக்கு,குளம்,தொழில்
பிரவாலம் = தளிர்
பிரவாளம் = பவளம்
பிரவிடை = ஒரு பெண் பருவம், ஐம்பைத்தைந்து வயதுடைய பெண்
பிரவிருத்தி = செய்கை, முயற்சி, மலக்கழிவு
பிரவிருத்தித்தல் = விரிதல், செய்தல்
பிரவீணன் = சமர்த்தன்
பிரளயம் = அழிவு,வெள்ளம், யுகாந்தம்
பிரளயாகலர் - ஆணவமலம், கன்மம் ஆகிய இருமலங்களையுடைய ஆன்மாக்கள்
பிராகாமியம் = நினைத்தபோதெல்லாம் பெறுவது, ஒரு சித்தி
பிரகாரம் = மதில், பிரகாரம்
பிராகிருதம் = அழியத்தக்கது, இழிசனர் மொழி, திசை மொழி, வடமொழி திரிவு
பிராசனம் = ஊட்டல், உண்கை
பிராசாதம் = கோயில்
பிராதி = கிழக்கு, முன்னுள்ளது
பிராசீனம் = பழமை
பிராஞ்ஞன் = அறிஞன்
பிராட்டி = தலைவி
பிராணன் = காற்று, சீவன், சுவாசம்
பிராணலயம் = சீவ ஒடுக்கம்
பிராணாயாமம் = பிராணவாயுவை இரேசகபூரக கும்பகஞ் செய்தல்
பிராதக்காலம் = விடியற்காலம்
பிரதா = அண்ணன்
பிராத்தி = ஒரு சித்தி, பேறு, அடைதல்
பிராந்தம் = அருகு
பிராந்தி = சுழலல், மயக்கம்
பிராந்தியம் = சுற்றுப்பட்டு
பிராமணியம் = அத்தாட்சி
பிராமி = சரஸ்வதி, எழுத்து வகை
பிராயச்சித்தம் = பாப பரிஹாரத்திற்காகச் செய்யப்படும் கிரியை
பிராயச்சித்தவிதி = சாந்தி முறை
பிராயம் = பக்குவம், வயது நிலை