பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிராரத்தம் 291

பிறந்தை


பிராத்தம் 291 பிறந்தை

பிராத்தம் = அனுபவிக்குங் கன்மம், ஊழ்வினை
பிராரம்பம் = ஆரம்பம்
பிரார்த்தனம் = பிரார்த்தனை, மன்றாட்டு, விண்ணப்பம்
பிரிசம் = பிரியம்
பிரியலர் = சிநேகிதர்
பிரிவாற்றாமை = விரகவேதனை
பிருகதி = கத்தரிச்செடி
பிருகுடி = புருவம்
பிருங்கம் = வண்டு
பிருட்டம் = பின்பக்கம், முதுகு, சகனம்
பிருதிவி = பூமி, மண்
பிருதை = குந்திதேவி
பிருத்தியன் = அடிமை
பிருந்தம் = துளசி
பிருந்தை = துளசி
பிரேதம் = பிசாசம், பிணம்
பிரேதவனம் = மயானம்
பிரோகம் = ஏவுதல்
பிரோணம் = ஏவுதல்
பிரை = பயன், உறைமோர்
பிலஞ்சுலோபம் = எறும்பு
பிலத்துவாரம் = பாதாளவழி
பிலம் = கீழறை, குகை,வளை
பிலவங்கல் = குரங்கு, மான்
பில்குதல் = வழிதல், பொசிதல்
பில்லி - பூனை, சூனியம்
பிழம்பு = திரட்சி, வடிவம், உடல், கொடுமை
பிழா = இறை, கூடை
 பிழார் = இறை, கூடை
பிழி = கள்
பிழியர் = கள் விற்போர்
பிழியல் = தேன்
பிள்ளை - கரிக்குருவி, காகம், மகன், வயிரவன், இளமை
பிறகிடுதல் = பின்னிடல், தோற்றல், கழிதல்
பிறக்கம் = ஒளி, அச்சம், மரக் கொம்பு, உயர்ச்சி, குவியல், மலை
பிறக்கு = பின், வழு, வேறு முதுகு, அடுக்கு
பிறங்கடை = மகன், வழித்தோன்றல்
பிறங்கல் = உயர்வு, ஒளிர்தல், பெருக்கம், மலை, மிகுதி, திரள், பெருமை, விளக்கம், அரசன்
பிறங்குதல் = விளங்குதல், உயர்தல், சிறத்தல், நிலை மாறுதல், செறிதல், பெருத்தல், ஒலித்தல்
பிறந்தை = பிறவி, பிறந்தகம், சுபாவம், துன்பம்