பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிறழ்தல் 292

பீடிகை


பிறழ்தல் 292

பிறழ்தல் = மாறு, துள்ளுதல், விளங்குதல், முரிதல், திகைத்தல், இறத்தல், நடுங்குதல்,
பிறப்பிலி = கடவுள்
பிறழ்வு = ஒளி செய்தல், நடுக்கம், வேறாதல், பெயர்தல்
பிறனில் = பிறன் மனைவி
பிறாண்டு = பிற இடம்
பிறை = பாலச்சந்திரன்
பிறைசூடி = சிவபிரான்
பிறையிரும்பு = அரிவாள்
பிறைவடம் = சந்திராகாரம் எனனும் ஆபரணம்
பிறைமுகவாளி = அர்த்த சந்திர பாணம்
பிற்றை = பின்னை நாள்
பிற்றை நிலை = வழிபடும் நிலை, பிற்பட்ட நிலை
பினாகபாணி = சிவபிரான்
பினாகம் = சிவன் வில்
பினாகினி = பெண்ணையாறு
பின்பனிக்காலம் = மாசி, பங்குனி மாதங்கள்
பின் பிறந்தாள் = இலட்சுமி, தங்கை
பின்றுதல் = மீளுதல், மாறு படுதல், பின்னிடுதல்
பின்றை = பின்பு, பின்னால்
பின்னகம் = மயிர்முடி, பின்னிய மயிர் பேதம்
பின்னணை = வீட்டுக் கொல்லை
பின்னம் = வேறு, பிளவு, பொடி, கீழ்வாய் இலக்கம், மாறுபாடு
பின்னிலை = வழிபடல்
பின்னை = இலக்குமி, தங்கை, பின், நப்பின்னை
பின்னை கேள்வன் = திருமால்
பிக்ஷாடணம் = பிச்சைக்காக திரிதல்
பிக்ஷூ = சந்நியாசி



பீ


பீசம் = அண்டம், விதை,
பீசாட்சரம் = மந்திரத்தில் முக்கிய எழுத்து
பீடனம் = துன்புறுத்தல்
பீடிகை = அணிகலச்செப்பு, ஆசனம், கடைவீதி, பூந்தட்டு, தேர்த்தட்டு, முனிவர் இருக்கை