பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புட்கரம்

295

புதுவது


புட்கரம் = ஆகாயம், நீர், நிறைவு, பருந்து, தாமரை, வாள், யானைத்துதிக்கை, நுனி
புட்கரிணி = தாமரைக்குளம், பெண்யானை, கோவில் குளம்
புட்கலம் = நிறைவு, உடம்பு, பிச்சையுணவு
புட்டகமண்டபம் = கூடாரம்
புட்டகம் = புடவை
புட்டம் = காகம், சீலை
புட்டி = கொழுப்பு, குப்பி, வளர்ச்சி, சிறுபடி, பருமை
புட்டில் = குதிரை உணவு கட்டும்பை, கூடு, விரலுறை, கெச்சை, தக்கோலக்காய், அம்பறாத்தூணி
புட்பகாசம் = விமானக்கோயில்
புட்பமஞ்சம் = பூங்கொத்து
புட்பம் = புஷ்பம், பூ, வாழை
புட்பவருடம் = பூ மழை
புட்பாகன் = விஷ்ணு
புட்பரசம் = மகரந்தம்
புணரி = கடல், அலை
புணர்ச்சி = இசைவு, கலத்தல்
புணர்ப்பு = இணைப்பு, உடல், மாயம், நட்பு, துணை, தந்திரம், செயல், சூழ்ச்சி
புணை = மரக்கலம், ஒப்பு, உதவி, ஆதாரம்
புண்டரம் = கழுகு, நெற்றிக்குறி, குருக்கத்தி
புண்டரிகம் = தாமரை, புலி, திக்குயானை, வெண்டாமரை, கமண்டலம், வண்டு
புண்டரிகன் = திருமால்
புண்ணியதிசை = வடதிசை
புண்ணியன் = சிவன், கடவுள்
புண்ணியாகவாசனம் = தூய்மைக்கிரியை
புண்டரீகாக்ஷன் = விஷ்ணு
புண்ணீர் = இரத்தம்
புண்வழலை = புண்சீழ்
புதவு = கதவு, வாயில், அறுகம்புல்
புதல் = புதர், தூறு, அரும்பு, புருவம்
புதல்வன் = மகன், மாணாக்கன்
புதவம் = வாயில், கதவு, அறுகு
புதவு = வாயில், கதவு, மதகு, அறுகம்புல்
புகற்பூ = நிலப்பூ
புதா = கதவு, பெருநாரை கொக்கு, மரக்கால்
புதினம் = அதிசயம்
புதுநிரை = புதுவெள்ளம்
புதுமை = அற்புதம், அபூர்வம், பழக்கம் இன்மை, அழகு
புதுவது = புதிது