பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புராவிருத்தம்

297

புலத்தல்


புராவிருத்தம் = இதிகாசம் புரி = மருதநிலஊர், ஆசை, கட்டு, யாழ்நரம்பு, கயிறு, முறுக்கு, செயல், உடல், நகர், இராஜதானி, ஊர் புரிக்கூடு = நெற்கூடு புரிசை = மதில் புரிதல் - விரும்பல், செய்தல், தியானித்தல், கொடுத்தல், சொல்லுதல், விசாரித்தல், மிகுதல், அசைதல், விளங்குதல் புரித்தல் = புதித்தல், விரும்பச்செய்தல் புரிமுகம் = சங்கு, கோபுரம் புரியட்டகாயம் = சூக்கும தேகம் புரிவு = தொழில், தவறு, அன்பு, ஆசை, தெளிவு புரிடம் = மலம், அழுக்கு புரு = பருமை, மிகுதி, குழந்தை புருகூதன் = இந்திரன் புருடன் = ஆன்மா, புருஷன் புருஷகாரம் = ஆண்மை, முயற்சி புருஷார்த்தம் = அறம் பொருள் இன்பம் விடு புரூரம் = புருவம் 38 புரை = உள்துளை, குரல்வளை, விளக்குமாடம், குற்றம், பொய், இலேசு, கூறுபாடு, உயர்வு, வீடு, ஆச்சிரமம், கோவில், அறை, பக்கம் புரைதல் = ஒத்தல், பொருந்தல்,மறைத்தல், நேர்தல் புரைத்தல் = பெருமையாதல், குற்றப்படுதல், மறைவு வெளிப்படுதல் புரையோர் = உண்மைப்பொருள் உணர்ந்தவர், பெரியோர் புரோகம் = நாய், முன் செல்லல் புரோகிதன் = இந்திரன், ஊர்ச்சோதிடன், சடங்கு செய்வோன் புரோசர் = குறுநிலமன்னர் புரோசை = யானைக் கழுத்திடு கயிறு புரோட்சணம் = மந்திர நீரைத் தெளித்தல் புரோதம் = குதிரை மூக்கு புரோதாயம் = தூய்மை நீரில் குளிக்கை புரோவாதம் = பொருளை முன்னர்க் கூறுவது புலத்தகை = ஊடல் புலத்தல் = அறிவுறுத்தல், மனம் வேறுபடல், துன்புறுதல், வெறுத்தல்