பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலத்தி

298

புலோமசை



புலத்தி = வண்ணாத்தி புலத்தோர் = ஞானிகள் புலமையோர் = கவிஞர் புலப்பகை = ஐம்புலன்களை அடக்கல் புல்பம் = பிதற்று புலமகன் = புலமையுள்ளவன் புலமகள் = சரஸ்வதி புலமங்கை = நிலமகள் புலமை = கல்வி, மெய்ஞ்ஞானம் புலம் = அறிவு, இடம், ஐம்புலன், திக்கு, வயல், விடயம், நாடு, நூல், துப்பு புலம்பல் = இரங்கல், ஒலித்தல் புலம்பன் = ஆம்மா, கடல் நிலத் தலைவன் புலம்பல் = தனிமை, ஒலி, அச்சம், நடுக்கம், குற்றம், வெறுப்பு, கடற்கரை, பிரிவு, வருத்தம் புலம்பெயர்மாக்கள் = அயல் நாட்டினர், கடல் வழியாக மற்ற நாடுகளுக்குச் செல்பவர் புலரி = சூரியன், விடியல் புலர்தல் = முற்றல், தெளிதல், உலர்தல் புலவர் = அறிஞர், கம்மாளர், கவிவாணர், தேவர் புலவல் = வெறுப்பு புலவன் = ஆன்மா, அறிஞன், தேவன், தேவேந்திரன், புதன் முருகன் புலவி = ஊடலின் முதிர்வு, வெறுப்பு புலவு = இரத்தம், ஊன், புலால் நாற்றம் புலன் = காட்சி, அறிவு, விடயம், வயல் புலன்வென்றோர் = முனிவர் புலகம் = சோற்றுப் பருக்கை புலால் = ஊன், மீன், தீ நாற்றம் புலானீர் = இரத்தம் புலி = ஒரு மிருகம், ஒரு சாந்து, வேங்கை மரம் புலிங்கம் = ஊர்க்குருவி, தீப்பொறி புலித்தன் = மிலேச்சன் புலிமுகப்பு = அரண்மனை வாயில் புலியடிக்குலை = வாழைக்குலை புலியூர் = சிதம்பரம் புலுதம் = அளபெடை புலை = இழிவு, புலால் புலோமசித்து = இந்திரன் புலோமசை = இந்திராணி