பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புல்

299

புளிதம்



புல் = அனுடநாள், பனை, இழிவு, புணர்ச்சி, புலி, புற வயிரமுடைய மரம் புல்குதல் = புணர்தல், தழுவுதல் புல்லணல் = இளந்தாடி புல்மரம் = தென்னை மரம் புல்லகம் = நுதலணி புல்லம் = வசைமொழி, அபிநயம், எருது, மலர்ந்த பூ புல்லர் = கீழ்மக்கள், வேடர் புல்லார் = பகைவர் புல்லார்தல் = தோற்றல் புல்லாள் = ஆறலை கள்வன், புல்உரு புல்லி = புறவிதழ், பூ இதழ் புல்லிங்கம் = ஆண்பால் புல்லினம் = ஆட்டினம் புல்லுதல் = ஒத்திருத்தல், தழுவுதல், வரவேற்றல், பொருந்துதல் புல்லுநர் = சிநேகிதர் புல்லெழுதல் = மக்கள் நடமாட்டமின்மை புல்வாய் = கருமான், கலைமான் புவம் = வான் புவனம் = பூமி, உலகம், நீர், ஆகாயம் புவலோகம் = மேல் ஏழுலகிலொன்று புவனை = ஒரு சக்தி புவன் = கடவுள் புவி - பூமி புழகு = மலை யெருக்கு புழங்குதல் = வழங்குதல் புழல் = மதகு, மீன், பணியாரம், துளை புழல்வல்சி = தேங்குழல் புழுகு = அம்புத்தலை, ஒருமணம், பொருள் புழுக்கம் = உஷ்ணம், பொறாமை, துன்பம் புழுக்கல் = சோறு, அவித்தது புழுக்கு = இறைச்சி புழுக்கை = அடிமை புழுங்குதல் = ஆவியெழவேகுதல், பொறாமைப்படுதல், வருந்துதல், கோபித்தல் புழுதி = காய்ந்த நிலம் புழை = துவாரம், சிறியவாயில், காட்டுவழி, சாளரம், நரகம், அம்பு, அறை புழைக்கை = துதித்தல் புழைத்தல் = துளையிடுதல் புளகம் = மயிர்சிலிர்த்தல், கண்ணாடி, மகிழ்ச்சி, குமிழ்ப்பு புளகிதம் = மகிழ்ச்சி, மயிர்ச்சிலிர்ப்பு புளிஞர் = வேடர் புளிதம் = ஊன், ஓர்உணவு