பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புன்செய்

302

பூண்


புன்செய் = கொல்லை, நெல் தவிர வேறு தானியங்கள் பயிரிடப்படும் நிலம் புன்தலை = இளந்தலை புன்மை = சிறுமை, குற்றம் புன்னாதம் = புன்னை, வெள்ளாம்பல் புன்னாதர் = இழிவறிவாளர் புன்னெறி - ஈனவழி

பூ


பூ - நிறம், அழகு, கூர்மை, புட்பம், தாமரை, பொலிவு, மலர், பூமி, பட்டம், பிறப்பு பூகண்டகர் = அசுரர் பூகதம் - பாக்கு மரம் பூகதன் = பூகழ்வோன் பூமியை அடைந்தவன் பூகம் = கமுகு, கழுகு, திரட்சி, பிறப்பு, இருள், நேரம், ஒருசாதிக்கூட்டம் பூக்கம் = ஊர், கமுகு பூக்கவர்ந்துண்ணி = குரங்கு பூங்கலன் = பூக்குடலை பூங்கா = நந்தனவனம் பூசணம் = தூசி பூசல் = ஒப்பனை, பூசுதல், பேரொலி, பலரறிதல், யுத்தம், வருத்தம் பூசிதம் = வணக்கம் பூசு = தூசி பூசுதல் = கழுவுதல், தடவல், இயைதல் பூசுதன் = செவ்வாய் பூசுதை = சீதை பூசுரர் = அந்தணர் பூசை = பூனை, ஆராதனை பூஞை = பூனை பூடு = புல், பூண்டு பூட்கை = வலி, போர்வை, மனவுறுதி, மேற்கோள், சிங்கம், யானை பூட்டகம் = வீண்பெருமை, வஞ்சகம் பூட்டாங்கயிறு = நுகக்கயிறு பூட்டன் = பாட்டன், தகப்பன் பூட்டை = இறைகூடை பூணி = எருது, பூணிப்பறவை பூணித்தல் = தோற்றுவித்ததல், குறிப்பிடுதல் பூணிப்பு = ஆனை, தீர்மானம் பூண் = ஆபரணம், வளையம், கவசம், உலக்கை முதலியவற்றின் பூண்