பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூண்டி

303

பூரிப்பு


பூண்டி = ஊர், கடலுள்திடர் பூதகாலம் = இறந்த காலம் பூதசதுக்கம் = நாற்சந்தி பூதசாரசரீரம் = தேவன் சரிரம், தூலசரிரம் பூதநாதன் = சிவபிரான் பூதபரிணாம தேகம் = தூலதேகம் பூதபரிணாமம் = பூதங்களின் திரிபு பூதம் = ஆல், இறந்த காலம், உயிர், உண்மை, ஐம்பூதம், சங்கு, சுத்தம், பரணி, பூதகணம், பிசாசம் பூதரம் = பொன்மலை, மலை பூதரோதரம் = மலைக்குகை பூதவம் = ஆல், மருது பூதாரம் = பன்றி பூதி = திருநீறு, சிங்காரம், செல்வம், நாகம், பிறப்பு, புலால், புழுதி, விபூதி பூதிகம் = உடம்பு, பூமி பூதிசாதனம் = சிவ சின்னங்கள் பூதியம் = உடல் பூதுரந்தரர் = அரசர் பூதேசன் = சிவன் பூதேவர் = பார்ப்பார் பூத்தல் = உண்டாதல், மலர்தல், பொலிவு, பெறுதல், இருது வாதல் பூநாகம் = நாங்கூழ் புழு, நாகப்பூச்சி பூநீறு = உவர்மண் பூபதி = அரசன் பூபம் = மணிகாரம் பூபன் = புவிராசன், செவ்வாய் பூபாலன் = அரசன், வேளாளன் பூமகள் நாயகன் = விஷ்ணு பூமன் = பிரமன், மன்மதன், அரசன், செவ்வாய் பூமகள் மைந்தர் = வேளாளர் பூமி = இடம், தேசம், நிலம், நாக்கு பூமிசை நடந்தோன் = அருகன், புத்தன் பூமின் = இலட்சுமி பூம்பிடகை = பூக்குடலை பூம்பொருக்கு = வாடற்பூ பூரகம் = மூச்சை உள்ளிழுத்தல், நிரப்புதல் பூரணன் = கடவுள் பூரணி = இலவு மரம் பூரம் = வெள்ளம், கற்பூரம், பொன், ஒரு நட்சத்திரம், தேள், நிறைவு பூரி = பொன், வில் நாண், மிகுதி, குற்றம் பூரிப்பு = மிக்க களிப்பு