பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூரிமம்

304

பெயல்


பூரிமம் = தெருப் பக்கம், திண்ணை, தொட்டி பூரிமாயன் = நரி பூரியம் = ஊர், அரசர் வீதி பூரியர் = கீழ் மக்கள் பூருகம் = மரம் பூருண்டி = மல்லிகை பூருவதிக்கு = கிழக்கு பூருவம் = பழமை, முன், பூர்வம், கிழக்கு, ஆதி பூர்வேத்தாம் = வரலாறு, வடகிழக்கு பூவல் = செம்மண், சிவப்பு, பூத்தல் பூவிலி = பிறப்பற்றவன் பூவை = காயா, நாகணவாய்ப்புள், பெண் பூவை வண்ணன் = விஷ்ணு பூழி = விபூதி, குழைசேறு, புழுதி, காடை பூழியன் = பாண்டியன், சேரன் பூழில் = அகில், பூமி பூழை = சிறுவாயில், துவாரம் பூழ் = காடை, துவாரம் பூழ்க்கை = யானை, யாளி பூளை = ஒருவகைச் செடி, வெற்றிப்பூ, இலவம்பஞ்சு பூனதம் = பொன் பூனைத்திசை = தென்கிழக்கு பூன்றம் = பூர்ணம் பூஷிதம் = அலங்காரம்

பெ

பெகுலம் = அநேகம், பல பெங்கு = கள், தீயொழுக்கம் பெட்டல் = விரும்பல் பெட்டு = பொய், வீண் பெருமை பெட்பு = விருப்பம், அன்பு பெண்டகன் = அலி பெண்ணலம் = பெண்ணின்பம், பெண்தன்மை பெண்மை = கற்பு பெண்ணை = அனுஷநட்சத்திரம், ஓர் ஆறு, பனைமரம் பெண்வழிச்சேறல் = பெண் பேச்சைக் கேட்டல் பெதும்பை = பதினோரு வயது பெண் பெத்ததசை = ஆன்மா பாசத்திற்குட்படிருக்கும் நிலை பெத்தம் = கட்டு, பந்தம் பெத்தரிக்கம் = பெருமை, கருவம், குழப்பம் பெம்மான் = கடவுள், பெரியோன் பெய்வளை = பெண் பெயல் = மேகம், மழை, மழைத்துளி