பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெய்தல்

305

பெற்று


பெய்தல் = பொழிதல், வார்த்தல், பரப்புதல், அணிதல், செறித்தல் பெய்துரை = பாயிரம் பெய்வளை - பெண் பெயர் = ஆள், பொருள், வஞ்சினம், புகழ், பெயர்ச்சொல் பெருகுதல் = நிறைதல்,முதிர்தல், கேடுறுதல் பெருக்கம் = செல்வம், நெருங்குதல், மிகுதி, வெள்ளம், நிறைவு பெருக்கல் = நிரப்புதல், அதிகப்படுத்தல், மிகுவித்தல், சீத்தல் பெருக்காளர் = வேளாளர் பெருக்கு = வெள்ளம், மிகுதி பெருங்கரம் = கோவேறு கழுதை பெருங்கலம் = பேரியாழ் பெருஞ்சாய் = பேராற்றல் பெருஞ்சோறு = அரசன் படைத்தலைவர்கட்கு அளிக்கும் பேருணவு பெருநம்பி = மங்கலபாடகன் பெருநயப்பு = பெருவிருப்பு பெருநீர் = கடல் பெருநெறி = மோட்ச வழி பெருந்தகவு = பெருமை பெருந்தகை = பெருமையுடையோன், எப்பொருட்கும் தலைவன் 39 பெருந்திணை = பொருந்தாக்காமம் பெருந்தேவி = அரசன் மனைவி பெருமக்கள் = பெரியோர் பெருமஞ்சிகன் = நாவிதன் பெருமடை = சோற்றுப்பலி பெருமலை = மேருமலை பெருமான் = விஷ்ணு, பெருமையிற் சிறந்தோன் பெருமிதம் = பேரெல்லை, வீரம், உள்ளச்செருக்கு, களிப்பு, மேம்பாடு பெருமுத்தரையர் = செல்வர் பெரும்பிறிது = இறப்பு பெரும்பொழுது = கோடை முதலிய இருது காலங்கள் பெரும் பொருள் = முத்தி பெருவனம் = கடல் பெறுக்கல் = அரிசி பெறுதி = இலாபம் பெற்றம் = எருது, காற்று, பசு, பெருமை பெற்றி = தன்மை, பேறு, பெருமை, நிகழ்ச்சி, இயல்பு பெற்று = எருது, செல்வாக்கு, அடுக்கு