பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுளுதல்

309

பொருநைத்துறைவன்


பொதுளுதல் = செழித்தல், நெருங்குதல், தழைத்தல் பொத்தகம் = மயில் இறகு, சித்திரப்படாம், புத்தகம் பொத்தல் = மூடுதல், கடன், குற்றம் பொத்தாறு = ஏர்க்கால் பொத்திரம் = எறியாயுதம் பொத்திலம் = மரப் பொந்து பொத்து = துளை, தவறு, வயிறு, பொந்து, மூடுதல்,பொய், புரை பொத்துதல் = புதைத்தல், வாய்மூடல், தைத்தல், தீ மூட்டல், மறைத்தல், அடித்தல், தவறுதல், செய்தல், நிறைத்தல் பொந்தி = உடம்பு,பருமை பொந்து = பல்லி பொம்மல் = சோறு, மகிழ்வு, பொம்மை, பொலிவு, மிகுதி, கூட்டம், பருமன் பொய் = மரப்பொந்து பொய்கை = கோட்டான், குளம் பொய்தல் = மகளிர் கூட்டம், சிற்றறிவு, மகளிர் விளையாட்டு, துளையாக்கல், பிடுங்கப்படுதல் பொய்த்தல் = தவறுதல், கெடுதல், வஞ்சித்தல் பொய்யாமை = மெய் பேசுதல் பொய்யாமொழி = குறள், வேதம் பொரியறை = கரடுமுரடான மரத்தின் அடிப்பகுதி பொருகளம் = யுத்தகளம் பொருக்க = விரைவாக பொருக்கு = காய்ந்த சிற்றேடு, பருக்கை, மரப்பட்டை, செதிள் பொருட்டு = மதிப்பு, காரணம் பொருட்பெண்டு = வேசை பொருண்மை = கருத்துப்பொருள் உளதாகும் தன்மை பொருதல் = போர் செய்தல் சூதாடல், மாறுபடல், ஒப்பாதல், தாக்குதல், பொருந்துதல், வளைதல், அலைத்தல், வீணை தடவல் பொருநல் = தாமிரபரணியாறு பொருநன் = அரசன், உவமிக்கப்படுவோன், படைத்தலைவன், தடாரிப்பறை வாசிப்பவன், சண்டை செய்பவன், பகைவன், களம்பாடுவோன், கூத்தன், வீரன், கூத்தாடி, குறிஞ்சி நிலத்தலைவன் பொருநை = தாம்பரபரணி ஆறு பொருநைத்துறைவன் = சேர அரசன்