பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொருந்தம்

310

பொறி


பொருந்தம் = பொருநையாறு
பொருந்தர் = நெய்பவர்
பொருந்தலர் = பகைவர்
பொருந்தாமை = வெறுப்பு,இயையாமை
பொருந்தார் = பகைவர்
பொருப்பரையன் - மலையரசன்
பொருப்பு = மலை, பக்கமலை
பொருமல் = விம்முதல், துன்பம், அழுதல், பொறாமை, பூரிப்பு
பொருமுதல் = அழுதல், வீங்கல்
பொருவுதல் = ஒத்தல், உராய்தல்
பொருளாள் = மனைவி
பொருள் = தேமல், உபமேயம், திரவியம், காரியம், தருமம், அறம், கடவுள் தன்மை, சொற்பொருள், பிள்ளை, பொன், பயன், முத்தி அறிவு, உண்மை, தத்துவம்
பொலம் = அழகு, பொன் நகை
பொலிகை = இலாபம்
பொலிதல் = சிறத்தல், புணர்தல், மிகுதல், செழித்தல், விளங்குதல், மங்கலமாகுதல்
பொலிவு = நிறைவு, அழகு
பொல்லம் = தைத்தல், துண்டு, இணைத்தல்
பொல்லார் = தையற்காரர்
பொல்லாங்கு = மறதி, தீங்கு, குற்றம்
பொல்லாமணி = துளையிடா மணி, சிறந்த மணி
பொழிதல் = கொடுத்தல், பெய்தல், நிறைதல், தங்குதல், சொரிதல்
பொழிப்பு = சிறப்புடையது, தொகைப்பொருள்
பொழில் = உலகம், சோலை, பூமி, பெருமை, நாடு
பொழுது = சூரியன், காலம்
பொழுதுபடுதல் = சூரியன் அத்தமித்தல்
பொளிதல் = துளைசெய்தல், கல்லைக் கோதல்
பொள்ளல் = உள் வயிரம் இல்லாதது, மரப்பொந்து துளைத்தல்
பொள்ளாமணி = சுயம்புமணி, துளையில்லாமணி
பொள்ளுதல் = துளைத்தல், கிழிதல்
பொறி = அறிவு, யந்திரம், மனம், இலக்குமி, எழுத்துக்கள், இந்திரியம், திரட்சி, தந்திரம், இலக்கணம், பதுமை, புள்ளி, ஒளி, பூர்வபுண்ணியம், நல்வினை, செல்வம், தீப்பொறி, மரக்கலம், வரி, முத்திரை, பட்டம், பீலி, வண்டு, நெருப்புத்துகள்