பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

போகாறு

312

போ


போகாறு

312

போ


போகாறு = செலவு, வழி போகி = அரசன், ஒரு பண்டிகை, இந்திரன், சுகமனுபவிப்போன், பாம்பு போகிய = ஒழிந்த போகில் = கொப்பூழ், பறவை, பூவரும்பு போகு = நெடுமை போகூழ் = இழக்கும் ஊழ் போக்காடு = சாவு, போக்கு போக்கிடம் = புகலிடம், ஒதுங்குமிடம் போக்கி = பின்பு, தவிர போக்கியம் = அனுபவப்பொருள், செல்வம், தானியம் போக்கு = போகுதல், வழி, சிறப்பு, குற்றம், பழக்கம், மீட்சி, புகல், வழி போஷித்தல் = ஆதரித்தல் போதகம் = இளமை, உபதேசம், யானைக்கன்று, யானை போதகரன் = துயிலெடை, பாடுவோன், அறிவிப்பவன் போதம் = அறிவு, புடவை,மரக்கலம், வீட்டுநிலம், வஸ்திரம், ஞானம் போதரல் = போதல்,கொண்டுபோதல் போதரவு = போதல், நயமான சொல் போதல் = சொல்லுதல், பிறத்தல், நிரம்புதல், நன்கு பயிறல், மிகுதல் போதருதல் = சொல்லுதல், வருதல், பெறப்படுதல் போதன் = அறிஞன், பிரமன், புத்தன் போதா = பெருநாரை போதி = அரசமரம், அறிஞன், மலை, ஞானம் போதிகை = தாழ்வாரத்தூண் போதியார் = புத்தர் போது = காலம், பூ அலரும் பருவத்தரும்பு, சூரியன் போத்திரி = பன்றி போத்து = செம்போத்து, மரக்கன்று, விலங்கின் படுக்கை, மான், எருது பொதுச்சொல், மனக்குற்றம் போந்து = பனை போந்தை = இளம்பனை, பனங்குருத்து போய்ப்பாடு = புகழ், பெரிதாய் இருக்கை போர் = சதயநாள், நெறி, போர், யுத்தம் போர்மடந்தை = துர்க்கை, வீரலட்சுமி போலி = பொய், வஞ்சம், ஒப்பு