பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

314


ம = சந்திரன் , சிவன் , நமன் மக = பிள்ளை மகடுஉ = பெண் மகண்மை = சிறுபெண் வடிவம் போலத் தோன்றும் ஒரு மிருகம் மகதி = நாரதன் வீணை, பார்வதி மகதியாழ் = மிக்க நரம்புடைய யாழ் மகத்து = பெரியது, விசாலம் மகத்துவம் = மேன்மை மகபதி = இந்திரன் மகம் = மகநாள், யாகம், விழவு, இன்பம் மகரகேதனம் = மச்சக் கொடி மகரகேதனன் = மன்மதன் மகரக்கொடியோன் = மன்மதன் மகரத்துவசன் = மன்மதன் மகரந்தம் = வண்டு, குயில், பூந்தேன், பூந்தாது, தேமா, தேன் மகரநீர் = கடல் மகரமாதம் = தைமாதம் மகரமீன் = சுறாமீன் மகரம் = முதலை, காதல், ஒருவகை மீன், குறங்கு, மங்கலான சிவப்பு நிறம், சுறா மகர யாழ் = பதினேழ் நரம்புடைய யாழ் மகராலயம் = கடல் மகரிகை = மகரதோரணம், ஒரு பெட்டி, ஓர் ஆபரணம் மகவான் = சிவன், இந்திரன், யாககர்த்தா மகவு = பிள்ளை மகள் = புத்திரி, மனைவி மகன்மை = ஆண் தன்மை மகன்றில் = ஒரு நீர்வாழ் பறவை மகா = பெருமை, மிகுதி மகாகபித்தம் = வில்வ மரம் மகாகாயம் = யானை மகாகாலன் = உருத்திரன் மகாச்சாயம் = ஆலமரம் மகாதேவன் = கடவுள், சிவபிரான் மகாதேவி = துர்க்கை மகாத்துமா = பரமஞானி மகாநுபாவன் = மகாத்துமா மகாபகை = பெருநதி மகாமாயை = பார்வதி மகாரண்ணியம் = பெருங்காடு