பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மணவடை

318

மண்ணரைத்தல்


மணவடை

318

மண்ணரைத்தல்


மணவடை= மண மண்டபம் மணவாட்டி = மனைவி மணி = அழகு, மணி, உருத்திராக்கம், நீலமணி, கருமை, நன்மை, நெல் தானியம், இரத்தினம், முத்து, ஒளி, சிறந்தது, விட நீக்கும் கல், உருண்டை மணிகண்டன் = சிவபிரான் மணிபூரம் = கொப்பூழிடம் மணிப்பிரவாளம் = வடமொழி தென்மொழி கலந்த நடை மணியகாரன் = விசாரணைக்காரன் மணியம் = வேலை மணிவடம் = முத்துமாலை, இரத்தின மாலை, உருத்திராட்ச மாலை மண் = நிலம், பூமி, அலங்கரித்தல் மத்தள மண் மண்கலம் = ஓடு மண்டநம் = அலங்காரம் மண்டபவெழினி = கூடாரம் மண்டம் = அலங்காரம், ஆமணக்கு, மண்டை மண்டலமாக்கள் = அரசர் மண்டலமிடுதல் = வட்டமிடுதல் மண்டலம் = உண்டை, கூட்டம், பூமி, வட்டம், சக்கரம், பிரதி பிம்பம், சூரிய மண்டலம், நாற்பது நாள் கொண்ட காலம், நாட்டுப்பிரிவு, உபநிடதங்களுள் ஒன்று மண்டலாகாரம் = வட்ட வடிவு மண்டலாதிபதி = ஏகசக்ராபதி மண்டலி = பாம்பு, பூனை மண்டலிகன்= தேசத்தை ஆள்பவன் மண்டலித்தல் = வட்டமிடுதல் மண்டலீகர் = அவ்வத் தேசத்தை ஆளும் அரசர் மண்டி - கலங்கல் நீர், களஞ்சியம் . மண்டிலம் = வட்டம், கண்ணாடி, குதிரை, ஓர் இருக்கை மண்டுதல் = நெருங்குதல்,அதிகமாதல், மூளுதல், நிரம்ப உண்ணுதல் மண்டூகம் = தவளை மண்டெரி = பெருந்தீ மண்டை = பிச்சாபாத்திரம், தலையோடு மன்ணரிவான் = குயவன் மண்ணரைத்தல் = சோம்பி இருத்தல்