பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணவர்

319

மதித்தல்




மண்ணவர்

319

மதித்தல்


மண்ணவர் = மனிதர் மண்ணன் = மதிகேடன் மண்ணீடு = திண்ணை மண்ணுதல் = கழுவுதல், அலங்கரித்தல், செய்தல், முழுகுதல் மண்ணுறுத்தல் = அலங்கரித்தல், நீராட்டல் மண்ணை = பேய், அறிவிலி, கூர்மழுக்கம் மண்ணோரம் = பட்சபாதம் மண்மகள் = பூமிதேவி மதகரி = ஆண்யானை மதகு = சலதாரை மதகு பலகை = நீர் தாங்கும் பலகை மதங்கம் = யானை, மேகம், மத்தளம், மலை மதங்கன்= மதங்க முனிவர், சண்டாளன் மதங்கி = பாடுபவன், பார்வதி மதத்தல்= செறுக்குதல், வெறித்தல், மலங்குதல் மதமலை = யானை மதம் = கொள்கை, மிகுதி, கஸ்தூரி, வெறி, வலி, உடன்பாடு, சந்தோஷம், கொழுப்பு, செருக்கு, தேன், கோட்பாடு, சாரம் மத்ரணி = ஒளியுடைய நகை மதர் = செருக்கு, மகிழ்ச்சி மதர்த்தல் = களித்தல், செழித்தல், மிகுதல் மதர்வு = மகிழ்வு, மிகுதி மதர்வை = மயக்கம் மதலை = பிள்ளை, கொன்றை, தூண், மரக்கலம், மழலை, பற்றுக்கோடு, குழந்தை, கொடுங்கை மதலைப்பள்ளி = கொடுங்கை தாங்கும், புறாத்தலை மதவலி = அரசன் மதனம் = கடைதல், காமம், தேனி, அழித்தல் மதனன் = மன்மதன் மதனி = மைத்துனி, அண்ணன் மனைவி மதன் = மன்மதன், வலி, செருக்கு, மிகுதி, அறியாமை, அழகு மதாணி = பதக்கம் மதாப்பு = மதஜலம் மதாவளம் = யானை மதளிப்பு - செழிப்பு மதி = சந்திரன், குபேரன், மாதம், அறிவு, கருதல், யானை மதிதம் =மோர் மதித்தல் = கடைதல், கணித்தல், வரையறுத்தல், கொழுத்தல்.