பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மயக்கம்323

மலைவில்லோன்


மலக்கம் = கலக்கம், துன்பம் மலங்கு = கலங்கு, ஒருவகை மீன் மலங்குதல் = கலங்குதல், திறழ்தல், ததும்புதல் மலபரிபாகம் = பந்தபாசம் நீங்கிப் பக்குவமடைதல் மலம்-பாவம், அழுக்கு, கர்ப்பூசம் மலயக்கால் = தென்றல் காற்று மலயமுனி = அகத்தியர் மலயம் = பொதியமலை மலயாசலம் = பொதிய மலை மலரகிதர் = மலம் நீங்கினவர் மலரவன் = பிரமன் மலரோன் = பிரமன் மலர்தல் = அகலுதல், பரத்தல், மிகுதல் மலர்மிசையேகினான் = அருகன், பிரமன், அன்பர்களின் மனத்தாமரையில் வாழும் கடவுள் மலாடு = மலையமான்நாடு, திருக்கோவலூர் நாடு, கொடுந்தமிழ் நாடுகளில் ஒன்று மலாவகம் = பிண்ணாக்கு மலினம் = குற்றம், அழுக்கு, மாசு மலிர் = நீரூற்று மலிர்நிறை = நீர்வெள்ளம் மலீமரம்= அழுக்கு மலைதல் = எதிர்த்தல், ஒத்தல், மயங்கல், சண்டை செய்தல், மாறுபடுதல், மேற்கொள்ளல், அணிதல், பகைத்தல், சூடுதல் மலைத்தல் = தடுமாறல், வருத்துதல், மயங்கல், பொருதல், மாறுபடல் மலைநாடன் = சேரன் மலை நாடு = சேர நாடு மலைபடுதிரவியம் = மிளகு, அகில், குங்குமம் முதலியன மலைப்பு = மயக்கம், ஒரு கூத்து, மாறுபாடு, திகைப்பு மலைமகள் = பார்வதி மலைமுழை = மலைக்குகை மலையசம் = சந்தனம், தென்றல் மலையமான் = சேரன் மலையரையன் = மலையரசன் மலையாளபகவதி = பார்வதி மலையானிலம் = தென்றல் மலையிலக்கு = வெளிப்படையானது மலைவாணர் = மலையில் வாழ்பவர், வேடர் மலைவில்லோன் = சிவன்