பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மலைவு

324

மறவை


மலைவு = போர், மாறுபாடு மல் = திருமால்கூத்து, வலி, வளம், மலை, வருவாய், மல்போர் மல்கல் = பெருகல், நிறைதல், செழித்தல் மல்லகதி = குதிரை நடைகளில் ஒன்று மல்லம் = மல்போர், கன்னம், பள்ளியறை மல்லர் = மற்போர் செய்பவர் மல்லல் = வளமை, வலி மல்லை = வளம், பெருமை, பிச்சை எடுப்பவர் பாத்திரம் மழ = இளமை, குழந்தை மழம் = இளமை மழலை = குழந்தைமொழி மழவன் = வீரன், கட்டிளைஞன் மழித்தல் = முண்டனம் செய்தல் மழவு = இளமை, குழந்தை மழு = எரி இரும்பு, கோடரி மழுவாளி = பரசுராமன், சிவன் மழை = குளிர், நீர் , மேகம், மழை, கருமை மழைக்கோள் = சுக்கிரன் மழைத்தல் = குளிர்தல், கருநிறமாதல், மழை நிறைந்திருத்தல் மழையான் = திருமால் மழையேறு = இடி மண்குதல் = குறைதல் மள்ளம் = வலி மள்ளர் = உழவர், வீரர், இளைஞர், மருதநிலத்தார் மறக்கருணை = கோபத்தோடு விளங்கும் அருள் மறக்கற்பு = கோபத்தோடு விளங்கு கற்பு மறங்குதல் = கலங்குதல் மறம் = கோபம், வீரம், மாறுபாடு, கொலை, பாவம், வலி, போர், கொடுமை, பொறாமை, மயக்கம் மறலல் = மாறுபடுதல் மறலி - எமன் மறல் = மயக்கம், நமன் மறலுதல் = மாறுபடுதல், போர் செய்தல், கொல்லுதல் மறலை = புல்லறிவாளன், மக்கள், பகைவர், கொடியவர் மறவன் = வீரன், மலைவேடன் மறவி = கள், மறதி, தேன், இழிவு, குற்றம் மறவை = கொடுமையுடையது