பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆடை

30

ஆதரிசனம்


ஆடை = பாலேடு, சீலை, தயிர், சித்திரை நட்சத்திரம்
ஆட்சி = பழக்கம், உரிமை, ஆளுகை, வழக்கம், ஆன்றோர்வழக்கு, பயன்கொள்ளல், அனுபவம், கிரகநிலை
ஆட்டி = மனைவி, தலைவி
ஆட்டு = விழவு, கூத்து
ஆட்டுதல் = அசைத்தல், துன்புறுத்தல், அலைதல், நீராட்டல், பாராட்டல்
ஆட்பிடியன் = முதலை
ஆணம் = சிறுமை, நேயம், குழம்பு, கொள்கலம், பற்றுக்கோடு
ஆணர் = நன்மை, வளமை
ஆணவம் = அகங்காரம், ஆணவ மலம்
ஆணி = எல்லை, மேன்மை, முதன்மை, மேற்கோள், ஆதாரம், ஆணி
ஆணு = நன்மை, அன்பு, இனிமை, நேயம்
ஆணை = மந்திரம், கட்டளை,வஞ்சினம், ஆட்சி, ஆன்றோர் மரபு
ஆண்டகை = அரசன், வீரன், பெருமையிற் சிறந்தோன்
ஆண்டலை = சேவற் கோழி, பூவாது காய்க்கும் மரம்
ஆண்டலைப்புள் = ஆண்மகன் தலை போன்ற வடிவம் கொண்ட பறவை
ஆண்டவரசு = திருநாவுக்கரசர்
ஆண்டளப்பான் = வியாழன்
ஆண்டு = அவ்விடம், வருடம், வயது
ஆண்மை = மனமுயற்சி, தைரியம், ஆளும்தன்மை, வீரம், வெற்றி, வாய்மை, உடைமை
ஆதங்கம் = அச்சம், தொந்தரவு, துக்கம், ஆபத்து, நோய்
ஆததாயிகள் = கொலை, களவு, கொளுத்தல் முதலிய தீச்செயல் புரிபவர்
ஆதபத்திரம் = குடை
ஆதபத்தினர் = சூரியர்
ஆதபம் = வெயில், தீ, குடை
ஆதபன் = சூரியன்
ஆதம் = ஆதரவு, விருப்பு, கூந்தற்பனை
ஆதரம் = அன்பு, ஊர் தொடக்கம்
ஆதரவு = உதவி, அன்பு, ஆசை, தேற்றல்
ஆதரிசம் = கண்ணாடி
ஆதரிசனம் = கண்ணாடி, வெளிப்படை ஆக்கல்